×

‘சேரன் பாண்டியன்’ பட நடிகை சித்ரா திடீர் மரணம் - ரசிகர்கள் அதிர்ச்சி

 
chitra

90களில் நடித்து வந்த நடிகை சித்ராவின் மரணம் ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

கே.பாலச்சந்தரால் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் நடிகை சித்ரா. ‘என் தங்கச்சி படிச்சவ’ படம் மூலம் தங்கை நடிகையாக பிரபலமானர். அதன்பின் பல திரைப்படங்களில் ஹீரோவின் தங்கையாக நடித்தார். ஊர்க்காவலன், சேரன் பாண்டியன் ஆகிய திரைப்படங்கள் அவரை ரசிகர்களிடம் நெருக்கமாக்கியது. இதயம் நல்லெண்ணெய் விளம்பரத்தில் மேலும் பிரபலமானார். 300க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். பல படங்களில் கதாநாயகியாகவும் நடித்துள்ளார். திருமணம் செய்து கொண்டு சென்னை சாலிகிராமத்தில் செட்டில் ஆனார். ஒரு தனியார் நிறுவனத்தையும் நடத்தி வந்தார். இவருக்கு ஸ்ருதி என்கிற மகள் இருக்கிறார். அவர் பிளஸ் டூ படித்து வருகிறார். 

இந்நிலையில், நேற்று இரவு திடீரென ஏற்பட்ட மாரடைப்பின் காரணமாக அவர் உயிரிழந்தார். அவரின் உடல் இன்று மாலை 5 மணிக்கு அடக்கம் செய்யப்படவுள்ளது. அவரின் மறைவுக்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
 

From around the web

Trending Videos

Tamilnadu News