×

இப்படியா மட்டமா இறங்குவீங்க... நடிகையை வறுத்தெடுக்கும் ரசிகர்கள்

தமிழ் பட வாய்ப்புகளைப் பிடிக்க கவர்ச்சி ரூட்டைக் கையிலெடுத்திருக்கிறாராம் அந்த கேரளத்து வரவு. 
 
இப்படியா மட்டமா இறங்குவீங்க... நடிகையை வறுத்தெடுக்கும் ரசிகர்கள்

தமிழ் சினிமாவுக்கு கேரளாவில் இருந்து இறக்குமதியானவர் அந்த நடிகை. குடும்பப் பாங்கான கேரக்டர்களில் நடித்து ரசிகர்கள் வரவேற்பைப் பெற்றார். குறிப்பாக வாத்தியார் படத்தில் அவர் ஒரு பாடலுக்கு காட்டிய அபிநயங்கள், அவருக்கு விருதே வாங்கித் தந்தது.

அதன்பின்னர் சில படங்களில் ஹீரோயின் வாய்ப்பு தேடி வந்தது. அவ்வளவுதான் அதன்பிற்கு வாய்ப்புகளே இல்லை. வந்த ஒன்றிரண்டு வாய்ப்புகள், செகண்ட் ஹீரோயின், கூட்டத்தில் ஒருவர் என்று போகத் தொடங்கியது. 

ஆனால், அதற்கும் மறுப்பு சொல்லாமல் நடித்துக் கொடுத்தார் நடிகை. அதனால், இண்டஸ்டிரியில் நல்ல பெயர்தான் கிடைத்ததே தவிர வாய்ப்புக் கிடைக்கல. இதனால், தெரிந்தவர்களிடம் எல்லாம் சமீபகாலமாகப் புலம்பித் தவித்திருக்கிறார். 

யார் கொடுத்த ஐடியாவோ தெரியல, நடிகை திடீரென சோசியல் மீடியாவில் ஆக்டிவாக வலம்வரத் தொடங்கினார். கண்கூசும் அளவுக்குக் கவர்ச்சியுடன் இவரே போட்டோஷூட் நடத்தி போட்டோகளைப் பரப்பத் தொடங்கியிருக்கிறார். வாய்ப்புக்காக இவ்வளவு மட்டமா இறங்கீட்டீங்களே மேடம் என்று கலாய்க்கிறார்கள் சினிமா ரசிகர்கள். 

From around the web

Trending Videos

Tamilnadu News