விஜய் சும்மா கூப்பிட்டாலே போதும்!. எல்லாத்தையும் விட்டு போயிடுவேன்!. நடிகை பளீர்!..

விஜயின் ஸ்டைல்: விஜய் அரசியலில் என்னை சும்மா கூப்பிட்டாலே போதும் போயிடுவேன் என பிக்பாஸ் பிரபலம் தர்ஷா குப்தா கூறியிருப்பது தான் இப்போது சோசியல் மீடியாவில் ட்ரெண்டாகி வருகின்றது. தற்போது அரசியலில் மிகவும் பரபரப்பாக பேசப்படும் நபராக திகழ்ந்து வருகிறார் நடிகர் விஜய். அந்த அளவுக்கு அரசியல் களத்தில் தன்னுடைய ஆட்டத்தை ஆடி வருகிறார். ஏற்கனவே நடனத்தில் கில்லாடியான விஜய் இப்போது அரசியல் களத்திலும் ருத்ர தாண்டவம் ஆடி வருகிறார் என்பதுதான் உண்மை.
விஜய் சி.எம் ஆக வேண்டும்: அந்த அளவுக்கு அரசியல் களத்தில் பல அரசியல் தலைவர்களை ஆட்டம் காண வைத்திருக்கிறார் விஜய். தன்னுடைய தெளிவான பேச்சாலும் மிரட்டும் தொணியிலும் பல சவால்களை விட்டு 2026 சட்டமன்ற தேர்தலில் தைரியமாக எதிர்கொள்ள காத்துக் கொண்டிருக்கிறார் விஜய். இந்த நிலையில் பிக் பாஸ் பிரபலமான தர்ஷா குப்தாவிடம் விஜயின் அரசியல் பற்றி கேட்டபோது ‘விஜய் பற்றி சொல்லவே வேண்டாம். அவருக்கு இருக்கும் ரசிகர்கள் ஏராளமான பேர். அவர் கண்டிப்பாக முதலமைச்சராக வேண்டும் என்று தான் என்னுடைய ஆசை.
விஜய் மட்டும் கூப்பிடட்டும்: ஏனெனில் அவர் முதலமைச்சராக வந்து அவருடைய ஸ்டைலில் இந்த சமுதாயத்திற்கு என்ன செய்யப் போகிறார். எப்படியான ஒரு நிலைப்பாட்டை கொண்டு வரப் போகிறார் என்பதை பார்ப்பதற்கு ஆவலாக இருக்கிறேன்’ என தர்ஷா குப்தா கூறினார். உடனே நிருபர் ‘விஜய் கட்சியில் உங்களை கூப்பிட்டால் போவீர்களா’ என கேட்டதற்கு ‘கண்டிப்பாக போவேன். அவர் மட்டும் கூப்பிடட்டும் போய்விடுவேன்’ என கூறினார்.
அதற்கு இன்னொரு நிரூபர் எம்எல்ஏ சீட் கொடுத்தால் அதை சம்மதிப்பீர்களா என கேட்டதற்கு எம்எல்ஏ சீட் என்று கூட வேண்டாம். என்னை சும்மா கூப்பிட்டாலே போதும். நான் அவர் கட்சியில் சேர்ந்து விடுவேன் என தர்ஷா குப்தா கூறி இருக்கிறார். இவர் சோசியல் மீடியாவில் புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களிடம் பிரபலமானவர். அதுமட்டுமல்ல சின்னத்திரையிலும் பல நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு மக்களை உற்சாகப்படுத்துகிறார்.
ஒரு சில படங்களில் நடித்திருக்கிறார் .பிக்பாஸில் கலந்து அதன் மூலமும் மக்களிடம் நல்ல ஒரு வரவேற்பை பெற்றார் தர்ஷா குப்தா. இந்த நிலையில் தான் இவரிடம் விஜய் பற்றிய இந்த கேள்வி கேட்கப்பட்டு அதற்கு தர்ஷா குப்தா பதில் அளித்திருக்கிறார். தற்போது விஜய் எச் வினோத் இயக்கத்தில் ஜனநாயகன் என்ற படத்தில் நடித்து வருகிறார். அந்த படம் முதலில் அக்டோபர் மாதம் ரிலீஸ் ஆகும் என சொல்லப்பட்டது. பின்னர் அது பொங்கலுக்கு ரிலீசாக வாய்ப்பிருப்பதாக தற்போது தகவல் கிடைத்துள்ளது. இந்த படம் அவருடைய கடைசி படம் என்பதால் கண்டிப்பாக ஒரு தரமான அரசியலை பேசும் படமாக ஜனநாயகன் திரைப்படம் அமையும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை.