
Cinema News
ஒழுக்கமா நடிச்சா தப்பா? சினிமா சரியில்லாம போயிடுச்சு!.. சர்ச்சை பதில் அளித்த தேவயானி!..
Published on
By
சினிமாவை பொறுத்தவரை பொதுவாக கதாநாயகர்கள்தான் அதிக காலம் பிரபலமாக இருப்பார்கள். கதாநாயகிகளை பொருத்தவரை ஒவ்வொரு காலகட்டத்திற்கு மட்டும் அவர்கள் பிரபலமாக இருப்பார்கள். அந்த சமயத்தில் அவர்கள் பெரும் கதாநாயகர்களோடு படம் நடிப்பார்கள் அதன் பிறகு அவர்களுக்கு சினிமாவில் வாய்ப்பு கிடைக்காமல் போய்விடும்.
அப்படி சினிமாவில் ஒரு காலகட்டத்தில் பெரும் நடிகர்களோடு வரிசையாக வாய்ப்புகளை பெற்று, விஜய், அஜித் போன்ற நடிகர்களுடன் நடித்து பிரபலமாக இருந்தவர் நடிகை தேவயானி.
தேவயானி நடித்த நீ வருவாய் என, சூர்யவம்சம், ப்ரண்ட்ஸ் போன்ற திரைப்படங்கள் மிகவும் பிரபலமானவை. சினிமாவிற்கு வந்த காலம் முதலே அதிகபட்சமாக தேவயானி புடவை, தாவணி போன்ற உடைகளை உடுத்தியே நடித்து வந்தார். கவர்ச்சியான காட்சிகளை அதிகமாக தவிர்த்து வந்தார் தேவயானி.
தேவயானி சொன்ன விஷயம்:
இதனால் தேவயானி திரைப்படம் என்றாலே அதற்கான காட்சிகளை அமைக்கும் பொழுது கவர்ச்சி இல்லாமலே காட்சி அமைத்தனர் இயக்குனர்கள். தற்சமயம் அவரை பேட்டி எடுத்தபொழுது இப்போதைய காலகட்டத்தில் நீங்கள் சினிமாவில் நடித்திருந்தால் கவர்ச்சியான படங்களில் நடிக்க வேண்டி இருந்திருக்கும்.
ஏனெனில் இப்போது கவர்ச்சியாக நடிக்காத நடிகைகளை பழம் என கூறி விடுகிறார்கள். எனவே இப்போது நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்திருந்தால் என்ன செய்திருக்கிறீப்பீர்கள் என அவரிடம் கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளிக்க தேவையானி நல்ல வேலையாக இப்போதைய காலகட்டத்தில் நான் பிறக்கவில்லை. பிறந்திருந்தால் சினிமாவில் நடிப்பது எனக்கு கடினமான விஷயமாக இருந்திருக்கும் என கூறியுள்ளார்.
தமிழ் சினிமாவில் முன்புதான் கவர்ச்சி பாடல்கள், கவர்ச்சி காட்சிகள் அதிகமாக இருந்தன. இப்போது அதையெல்லாம் படிப்படியாக குறைந்து கவர்ச்சி பாடல்கள் அதிகம் இல்லாத அளவிற்கு தமிழ் சினிமா மாறிவிட்டது. இந்த நிலையில் முன்பை விட இப்பொழுதுதான் தமிழ் சினிமாவில் கவர்ச்சி அதிகமாக உள்ளது என்றும் கவர்ச்சி காட்டும் நடிகைகள் மட்டுமே பிரபலமாக முடியும் என தேவயானி கூறி இருப்பது தவறு என நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
Pradeep: கோமாளி திரைப்படம் மூலம் இயக்குனராக அறிமுகமாகி ரசிகர்களிடம் பிரபலமானவர் பிரதீப் ரங்கநாதன். ஜெயம் ரவி, யோகி பாபு ஆகியோர் முக்கிய...
Pradeep: தமிழ் சினிமாவில் ஒரு சென்ஷேசன் பிரபலமாக தற்போது அறியப்படுபவர் நடிகர் பிரதீப் ரெங்கநாதன். கோமாளி படத்தின் மூலமாக இயக்குனராக அறிமுகமான...
சின்ன வயது முதலே சினிமாவில் நடித்து வருபவர் சிம்பு. பல வருடங்களாக சினிமாவில் நடித்து வருவதால் சினிமாவை பற்றிய அறிவு அதிகம்...
விடுதலை 2 திரைப்படத்திற்கு பின் சூர்யாவை வைத்து வாடிவாசல் எடுக்க திட்டமிட்டிருந்தார் வெற்றிமாறன். ஆனால் முழுக்கதையும் ரெடி ஆகாததால் சூர்யா நடிக்க...
Parasakthi: அமரன் படத்திற்கு பின் சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் பராசக்தி படத்தில் நடிக்க தொடங்கினார். இந்த படத்தில் சிவகார்த்திகேயன் மட்டுமில்லாமல்...