Categories: Cinema News latest news throwback stories

கவர்ச்சி பாடல் மூலமா சினிமாவுக்கு வந்த தேவயானி… இப்படியும் நடந்துச்சா?..

சூர்யவம்சம் திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவில் பெரும் உயரத்தை தொட்டவர் நடிகை தேவயானி. தேவயானி நடிக்கும் திரைப்படங்களில் பொதுவாக ஹோம்லி லுக்கில்தான் அவர் நடிப்பார்.

சூர்ய வம்சம் திரைப்படத்தில் கூட படம் முழுவதும் புடவை கட்டியே வலம் வருவார் தேவயானி. ஒரு பேட்டியில் தேவயாணி கூறும்போது எனக்கு கவர்ச்சியாக நடிப்பதே பிடிக்காது. சில படங்களில் மாடர்ன் உடைகளில் நடித்திருக்கிறேன். ஆனால் அவ்வளவாக நான் கவர்ச்சியாக நடிக்க மாட்டேன் என கூறியுள்ளார்.

தேவயானி குறித்து சில சுவாரஸ்யமான தகவல்களை பத்திரிக்கையாளர் செய்யாறு பாலு கூறியுள்ளார். அதில் அவர் கூறும்போது தேவயானி வடமாநிலத்தை சேர்ந்த நடிகை… அவர் முதலில் பாலிவுட் சினிமாவில்தான் நடிகையாவதற்கு முயற்சி செய்தார். ஆனால் அப்போது பாலிவுட்டில் நடிகையாவது அவ்வளவு எளிதான காரியமல்ல.

தேவயானிக்கு வந்த வாய்ப்பு:

அதற்கு வெகுவாக போராட வேண்டி இருந்தது. எனவே தமிழ் சினிமாவில் வாய்ப்புகள் கிடைக்குமா? என ஆராய்ந்து வந்தார் தேவயானி. அப்போது சிவசக்தி என்கிற சத்யராஜ் நடித்த ஒரு படத்தில் தேவயானிக்கு வாய்ப்பு கிடைக்கிறது.

Devayani

ஆனால் சிவசக்தி என்கிற அந்த படத்தில் வரும் கவர்ச்சி பாடலில் ஆடுவதற்குதான் அவருக்கு வாய்ப்பு கிடைக்கிறது. இந்த நிலையில் முதல் வாய்ப்பை தவறவிட வேண்டாம் என நினைத்த தேவயானி அந்த படத்தில் நடிக்கிறார். அந்த படத்தில் அவருக்கு வரவேற்பு கிடைக்கிறது.

ஆனால் தொடர்ந்து கவர்ச்சி பாடல்களில் நடிப்பதற்கே வாய்ப்புகள் வருகிறது. ஆனால் கவர்ச்சி பாடல்களில் நடிக்க பிடிக்காத காரணத்தால் தேவயானி நல்ல வாய்ப்புக்காக காத்திருக்கிறார். அதன் பிறகுதான் ஹோம்லி கதாபாத்திரத்தில் அவர் நடிக்க துவங்கினார். என செய்யாறு பாலு கூறியுள்ளார்.

இதையும் படிங்க: கடைசி வரை மறுக்கப்பட்ட விருது – கண்டுகொள்ளாத நடிகர் திலகம் சிவாஜி

Published by
Rajkumar