Categories: Cinema News latest news throwback stories

இயக்குனர் செய்த வேலை!.. விக்கி விக்கி அழுது ஆர்ப்பட்டம் செய்த நடிகை தேவிகா.. எதற்காக தெரியுமா?..

எவரையும் கவர்ந்திழுக்கும் வசீகர விழிகள், பார்த்ததுமே பிடித்துப் போகின்ற முகம் என அத்தனை அழகும் வாய்க்கப்பெற்றவர் நடிகை தேவிகா. தெலுங்கு தான் இவர் தாய்மொழி. எனினும் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி போன்ற மொழிகளில் பல படங்கள் நடித்துள்ளார்.

இவரது இயற்பெயர் பிரமிளா. படத்திற்காக தேவிகா என்ற பெயர் சூட்டப்பட்டது. ‘சொன்னது நீதானா சொல் சொல்’, ‘நினைக்கத்தெரிந்த மனமே’, ‘நெஞ்சம் மறப்பதில்லை’, ‘அமைதியான நதியினிலே ஓடம்’ போன்ற பாடல்களை கேட்டாலே தேவிகாவின் நினைப்புகள்தான் நம் மனதில் தோன்றும். அந்த அளவுக்கு அற்புதமான நடிப்பால் அசத்தியிருப்பார்.

devika

இவரின் நடிப்பில் பல படங்கள் சூப்பர் ஹிட்டாகி வெற்றிப் பெற்றது. மேலும் பல மொழிப் படங்களின் முன்னனி நடிகையாகவும் வலம் வந்திருக்கிறார். கிட்டத்தட்ட அனைத்து நடிகர்களுடனும் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார் தேவிகா.

இவரின் நடிப்பில் இன்றும் நம் நெஞ்சத்தை விட்டு நீங்காத படம் என்றால் அது நெஞ்சம் மறப்பதில்லை திரைப்படம் தான். அதுமட்டுமில்லாமல் தயாரிப்பாளராகவும் பணியாற்றியிருக்கிறார் தேவிகா. மேலும் தேசிய விருது நாயகியாகவும் திகழ்ந்தார்.

இதையும் படிங்க : ப்ளீஸ் ஒரு வாய்ப்பு கொடுங்க!.. நொந்துபோன செந்தாமரையை தூக்கிவிட்ட பாக்கியராஜ்…

தனது இயற்பெயரான பிரமிளாவை தேவிகா என மாற்றியது வேணு என்ற இயக்குனர். அதுவும் முதலாளி என்ற திரைப்படத்திற்காக. அந்த படத்தின் நடிகர், நடிகைகளை தேர்வு செய்தபின் அவர்கள் பெயரை வரிசையாக படப்பிடிப்பில் தெரியப்படுத்துவார்களாம். அதில் தேவிகா  படத்தின் நாயகி என போடப்பட்டுள்ளது.

devika

அதைப் பார்த்து தேவிகா யார் என்று கேட்க அங்கு இருந்த உதவி இயக்குனர் என்.எஸ்.ராஜேந்திரன் அது நீங்கள் தான் என்று கூறியிருக்கிறார். பிரமிளா என்ற பெயர் தெலுங்கு பெயர் போல இருப்பதால் படத்திற்காக தேவிகா என்று மாற்றிவிட்டார் என்று அவர் கூற அதற்கு தேவிகா படப்பிடிப்பில் தேம்பி தேம்பி அழுதிருக்கிறார்.

மேலும் என் அம்மா எனக்கு ஆசை ஆசையாக வைத்த பெயர் பிரமிளா. அதை போய் மாற்றிவிட்டீர்களே என்று சொல்லி அழுதாராம். ஆனால் பின்னாளில் தேவிகா என்ற பெயர் எந்த அளவுக்கு பிரபலமடைந்திருக்கிறது என்று இந்த பதிவை கூறிய என்.எஸ்.ராஜேந்திரன் ஒரு பேட்டியில் தெரிவித்தார்.

Rohini Sub Editor
நான் ரோகிணி. இந்த இணையதளத்தில் கடந்த 4 ஆண்டுகளாக செய்தி பிரிவில் சப் எடிட்டராக பணியாற்றுகிறேன். சினிமா தொடர்பாக அனைத்து செய்திகள் குறிப்பாக விமர்சனம், பழைய சினிமா தகவல்களை தருவதில் அதிக விருப்பம் உடையவர்.
Published by
Rohini