
latest news
இவங்களுக்கு பின்னாடி இப்படி ஒரு கதையா?.. பிரபல சீரியல் வில்லி நடிகையின் மோசமான மறுபக்கம்!..
கிட்டத்தட்ட 25 ஆண்டுகளுக்கும் மேலாக தனது திரைப்பயணத்தை வெற்றிகரமாக நடத்திக் கொண்டிருக்கும் நடிகைகளில் முக்கியமானவர் நடிகை தேவிப்பிரியா. வெள்ளித்திரை சின்னத்திரை என்று மாறி மாறி கலக்கிக் கொண்டிருப்பவர் தேவிப்பிரியா.
குறிப்பாக சின்னத்திரையில் மக்களுக்கு மிகவும் பரிட்சையமானவர்.இவர் எழுதிய ஒரு டாக்குமென்ரி மூலம் பிரபலமடைந்து மின்சாரக்கனவு படத்தின் மூலம் வெள்ளித்திரையில் அறிமுகமானார். அதை தொடர்ந்து உயிரோடு உயிராக படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து அதன் மூலம் மிகவும் பேசப்பட்டார்.

devipriya
நடிப்பது மட்டுமில்லாமல் டப்பிங் ஆர்ட்டிஸ்ட்டாகவும் இருக்கிறார். சிம்ரன், நதியா போன்ற முன்னனி நடிகைகளுக்கு இவர் டப்பிங் பேசியுள்ளார். ராதிகா எடுக்கும் சீரியலில் ஆஸ்தான நடிகையாகவே வலம் வருவார் தேவிப்பிரியா. குறிப்பாக போலீஸ் கதாபாத்திரம் என்றால் தேவிப்பிரியா என்று சொல்லுமளவுக்கு கனகச்சிதமாக இருப்பார்.
இதையும் படிங்க :24 மணி நேரம் ஆனாலும் விஜயகாந்த் இதை விடமாட்டார்… பிரபல தயாரிப்பாளர் ஓப்பன் டாக்…
சன் டிவியில் ஒளிப்பரப்பான சக்தி சீரியல் தான் இவர் நடித்த முதல் சீரியல். அந்த சீரியலில் இவர் நடித்த கதாபாத்திரத்திற்கு அதிக வரவேற்பு கிடைத்ததால் சின்னத்திரை இவரை விடவில்லை. தொடர்ந்து பல வெற்றி சீரியல்களில் நடித்து புகழ் பெற்றார். இவருக்கு அதிகமாக வில்லி ரோல்கள் கிடைக்கும். பரவாயில்லை என்று துணிச்சலாக நடித்து பெரும்புகழ் பெற்றார்.

devi priya
லட்சுமி வந்தாச்சு, பாசமலர், செல்லமே, சந்திரலேகா, பந்தம் போன்ற சீரியல்கள் இவரின் கெரியரில் மிகவும் குறிப்பிடும்படியான சீரியல்களாகும். இப்படி பல வெற்றி மாலைகளை சூடிய தேவிப்பிரியாவில் வாழ்க்கையில் ஒரு காலத்தில் புயலே வந்து வீசிவிட்டு போயிருக்கிறதாம்.
ஒரு விபச்சார வழக்கில் சிக்கி மிகவும் வேதனையடைந்திருக்கிறார் தேவிப்பிரியா. சென்னை மாநகர உறுப்பினரின் மகன் ஒருவருடன் லிவிங் ரிலேசன்ஷிப்பில் இருந்துள்ளாராம். அதனை பிடிக்காத இன்னொரு பெண் உறுப்பினர் தேவிப்பிரியா மீது விபச்சார வழக்கில் சிக்க வைத்திருக்கிறார்.
இதையும் படிங்க :அஜித்துக்கு ரஜினி ரெக்கமன்ட் செய்த திரைப்படம்… பின்னாளில் மாஸ் ஹிட் ஆன தரமான சம்பவம்… இது தெரியாம போச்சே!!

devipriya
ஆனால் சீரியலில் எப்படி கெத்தா இருப்பாரோ அதே போன்ற தைரியத்தோடு நீதிமன்றத்தில் வாதாடி தான் ஒரு நிரபராதி என வாதிட்டு வழக்கில் இருந்து விடுப்பட்டாராம் தேவிப்பிரியா. என்ன ஒரு துணிச்சலான பெண் தேவிப்பிரியா!.. இந்த தகவலை பயில்வான் ரெங்கநாதன் தன் சேனல் மூலம் தெரிவித்தார்.