எம்.ஜி.ஆர், சிவாஜி கணேசன் காலம் முதலே சினிமாவில் நடிகர்களுக்கு கிடைக்கும் அங்கீகாரம் நடிகைகளுக்கு கிடைப்பதில்லை. சினிமா நடிகைகள் என்றாலே அவர்களை இழிவாக மக்கள் பார்த்தனர். சமீபத்தில் கெளதம் மேனன் இயக்கத்தில் வெளிவந்த குயின் டிவி சீரிஸில் கூட அந்த மாதிரியான நிகழ்வுகளை பார்க்க முடியும்.
கதாநாயகியாக நடிப்பவர்களுக்கே இந்த நிலை என்றால் கவர்ச்சி பாடலில் ஆடுபவர்கள் நிலை இன்னமுமே மோசமாக இருந்தது. சில்க் ஸ்மித்தா பிரபலமாக இருந்த அதே காலக்கட்டத்தில் அவருக்கு போட்டியாக களம் இறங்கியவர் நடிகை டிஸ்கோ சாந்தி.
முதலில் ஒரு சில பாடல்களுக்கு மட்டுமே ஆடுவதற்காக வந்தார் டிஸ்கோ சாந்தி. ஆனால் அவரது நடனத்திற்கு இருந்த வரவேற்பு காரணமாக தொடர்ந்து வாய்ப்புகளை பெற துவங்கினார். அப்போதைய காலக்கட்டங்களில் இந்த மாதிரி கவர்ச்சி பாடல்களுக்கு மட்டும் நடனமாடும் நடிகைகளை பத்திரிக்கைகளும் கூட தவறாகவே சித்தரித்தன.
ரசிகர்கள் செய்த காரியம்:
அப்போதிருந்த பல பத்திரிக்கைகள் தொடர்ந்து டிஸ்கோ சாந்தி குறித்து தவறான கிசுகிசுக்களை எழுதி வந்தன. இதனால் பொது சமூகம் மத்தியில் டிஸ்கோ சாந்திக்கு மரியாதை இல்லாத நிலை ஏற்பட்டது. இதனையடுத்து ரசிகர் ஒருவர் ஒருமுறை அவருக்கு பெண்கள் அணியும் உள்ளாடையை தபாலில் அனுப்பியுள்ளார்.
ஆனால் அதையெல்லாம் சகஜமாக எடுத்துக்கொண்டு நடிக்கக்கூடிய ஒரு நடிகையாக டிஸ்கோ சாந்தி இருந்துள்ளார். இதற்காக அவர் தனது ரசிகர்களிடம் பெரிதாக கோபப்பட்டது கூட கிடையாதாம்.
இதையும் படிங்க: இயக்குனரை பெருமைப்படுத்த தனுஷ் செய்த காரியம்!… ஆனா கடைசில வேற மாதிரி ஆகிடுச்சு… அடப்பாவமே!
Vijay TVK:…
தனுஷ் நடித்த…
Karur Vijay:…
கரூரில் நடந்த…
Karur: நடிகர்…