அழகே பிரம்மனிடம் மனு கொடுக்க போயிருந்தேன்!.. வெள்ளை தேவதையாக மாறிய பேச்சுலர் நடிகை!..
தமிழ் சினிமாவின் இளம் நடிகைகளில் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியுள்ள நடிகை திவ்யபாரதி, தற்போது வெள்ளை நிற புடவையில் வெளியிட்டுள்ள புதிய புகைப்படங்களால் சமூக வலைதளங்களில் மீண்டும் கவனம் ஈர்த்துள்ளார்.
கோயம்புத்தூரை சேர்ந்த திவ்யாபாரதி, திரைப்படத் துறைக்கு வருவதற்கு முன்பு வெற்றிகரமான மாடலாக திகழ்ந்தார். 2015-ஆம் ஆண்டு "மிஸ் எத்னிக் ஃபேஸ் ஆஃப் மெட்ராஸ்" உள்ளிட்ட பல பட்டங்களை வென்று கவனம் பெற்ற அவர், பின்னர் திரைப்பட வாய்ப்புகளை பெற்றார். பொறியியல் படிப்பை முடித்த பின்னரே சினிமாவில் தனது பயணத்தை தொடங்கினார்.

தமிழ் திரையுலகில் பேச்சுலர் திரைபடம் மூலம் அறிமுகமானார் . நடிகர் ஜி.வி.பிரகாஷ் நடித்த இந்த படத்தில் "சுப்பு" என்ற கதாபாத்திரத்தில் நடித்த திவ்யாபாரதி, முதல் படத்திலேயே தனது இயல்பான நடிப்பால் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். படம் வணிகரீதியாக பேசப்பட்டதுடன், திவ்யபாரதிக்கு தனி ரசிகர் வட்டாரத்தையும் உருவாக்கிக் கொடுத்தது.

அதன்பிறகு அவர் பல்வேறு படங்களில் நடித்துள்ளார். குறிப்பாக மகாராஜா திரைப்படத்தில் விஜய் சேதுபதியின் மனைவியாக நடித்த அவரது கதாபாத்திரம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. மேலும் கிங்ஸ்டன், சேரனின் ஜர்னி உள்ளிட்ட படைப்புகளிலும் நடித்துள்ளார்.

தற்போது தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் பல புதிய படங்களில் கவனம் செலுத்தி வரும் திவ்யபாரதி, பொதுவாக மாடர்ன் மற்றும் கிளாமர் தோற்றங்களில் புகைப்படங்களை பகிர்ந்து வரும் நிலையில் இந்த முறை வெள்ளை புடவையில் பாரம்பரிய அழகை வெளிப்படுத்தியுள்ளார்.
