மயக்கமருந்து கொடுத்து அத்துமீறல்... வீடியோவை வைச்சு மிரட்டல்... நடிகை கண்ணீர்

புழல் போலீஸில் அவர் அளித்திருக்கும் புகாரில், தனியார் பொறியியல் கல்லூரி அதிபர் கோவிந்தராஜ் என்பவர் தான் எடுக்கும் படத்தின் ஹீரோயினாக நடிக்கத் தன்னை அணுகியதாகவும், புதுச்சேரியில் குளிர்பானத்தில் மயக்க மருந்து கொடுத்து தன்னிடம் அத்துமீறியதாகவும் குறிப்பிட்டிருக்கிறார் சமீரா. அதை வீடியோ எடுத்து வைத்துக் கொண்டு அடிக்கடி பாலியல் தொல்லை கொடுத்ததாகவும், ஒத்துழைக்காததால் தனக்கு மிரட்டல் விடுக்கப்படுவதாகவும் குற்றம்சாட்டியிருக்கிறார்.
தன்னுடைய வீட்டில் புகுந்து 8 பேர் கொண்ட கும்பல் கொலைமிரட்டல் விடுத்ததாக போலீஸ் அவசர எண்ணுக்கு அவர் தொடர்புகொண்டார். இதையடுத்து, அந்த கும்பலிடம் இருந்து அவரை மீட்ட போலீஸார், வழக்கு பதிந்திருக்கிறார்கள். இந்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. சமீரா, எதிராளி, வஜ்ரம், வென்று வருவான் உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார்.