×

மகேஷ் பாபுவிற்கு ஜோடி போடும் 80ஸ் கனவுக்கன்னியின் மகள்... படம் ஓடுமா?
 

தெலுங்கு நடிகர் மகேஷ் பாபு படத்தில் நடிக்க பாலிவுட்டின் இளம் நடிகையை களமிறக்க முடிவு செய்யப்பட்டு இருக்கிறது.
 
 
மகேஷ் பாபுவிற்கு ஜோடி போடும் 80ஸ் கனவுக்கன்னியின் மகள்... படம் ஓடுமா?

முன்னணி தெலுங்கு நடிகர் மகேஷ் பாபு. பெரும்பாலான மகேஷ் பாபு படங்கள் பெரிய அளவிலான வெற்றியை பெற்று வருகிறது. தொடர்ந்து, பல மொழிகளிலும் படம் டப் செய்யப்படுவதால் பெரிய ரசிகர்கள் பட்டாளத்தையே வைத்திருக்கிறார். இவரின் அடுத்த படத்தின் முக்கிய சேதி ஒன்று கசிந்து இருக்கிறது.

அந்த வகையில், இவரின் அடுத்த படத்தில் நடிகை ஸ்ரீதேவியின் மூத்த மகளும் நடிகையுமான ஜான்வி கபூர் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. அப்படத்தை இளம் இயக்குனர் ஒருவர் இயக்க, பாலிவுட் பிரபல இயக்குனர் கரண் ஜோஹர் தயாரிக்க இருப்பதாகவும் கிசுகிசுக்கப்படுகிறது. பாலிவுட்டில் வாரிசு நடிகர்களை வளர்த்துவிட்டதில் கரண் ஜோஹருக்கு முக்கிய பங்குண்டு.

தடக் என்ற இந்தி படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் ஜான்வி. தொடர்ந்து, சில படங்களில் நடித்தாலும் ஜான்விக்கு பாலிவுட்டில் சரியான அங்கீகாரம் இதுவரை கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
 

From around the web

Trending Videos

Tamilnadu News