×

இவரால்தான் நான் நடிப்பையே விட்டேன்... யாரைச் சொல்றீங்க மேடம்?

சினிமா வேண்டாம் என ஒதுங்கியிருந்ததற்கான காரணம் குறித்து நடிகை கௌதமி மனம்திறந்திருக்கிறார். 
 
 
இவரால்தான் நான் நடிப்பையே விட்டேன்... யாரைச் சொல்றீங்க மேடம்?

கோலிவுட்டில் 1990களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் கௌதமி. சூப்பர்ஸ்டார் ரஜினி, உலக நாயகன் கமல், பிரபு என முன்னணி நடிகர்கள் படங்களில் தொடர்ச்சியாக நடித்து வந்த கௌதமி, திருமணத்துக்குப் பின்னர் திடீரென நடிப்புக்கு முழுக்குப் போட்டுவிட்டு அமைதியானார். 


நீண்ட இடைவெளிக்குப் பின்னர் கமலுடன் பாபநாசம் படத்தில் கம்பேக் கொடுத்தார். அந்தப் படத்தில் இரண்டு பெண்களுக்குத் தாயாக நடித்திருந்த கௌதமியின் நடிப்பு பாராட்டப்பட்டது. இந்தநிலையில், சினிமாவில் நடிக்காமல் இருந்ததற்குக் காரணம் குறித்து நடிகை கௌதமி பகிர்ந்திருக்கிறார். 


``ஆந்திராவில் பிறந்த நான் எம்.பி.ஏ படிக்க வேண்டும் என்ற ஆசையோடு இருந்தேன். சினிமாவில் நடிப்பேன் என்றோ, அரசியலில் ஈடுபடுவேன் என்றோ ஒருநாளும் எதிர்பார்த்ததில்லை. ஆனால், ரஜினி, பிரபுவோடு குரு சிஷ்யன் படத்தில் நடித்தபிறகு திரும்பிப் பார்க்கவே நேரமில்லை. வருஷத்துக்கு 15 படங்கள் என 7 வருடங்களில் சுமார் 120 படங்களில் நடித்து விட்டேன். 


திருமணமாகி 3 ஆண்டுகளில் அந்த உறவு முறிந்தது. ஆனாலும், நான் எனது வாழ்வில் தனிமையில் இல்லை. எனது மகள் சுப்புலட்சுமிக்கு நடிக்க வேண்டும் என்ற ஆசை இல்லை. கேமராவுக்குப் பின்னாடி இருக்க வேண்டும் என்ற ஆசைதான். நடிக்க ஆசைப்பட்டாலும் நான் அதற்குத் தடையாக இருக்கப் போவதில்லை. நான் சினிமாவில் நடிக்காமல் ஒதுங்கியிருந்ததற்கு என் மகள்தான் காரணம்’’ என்று மனம்திறந்திருக்கிறார். 

From around the web

Trending Videos

Tamilnadu News