Categories: Cinema News latest news

விஜய் சேதுபதி பற்றிய கேள்வி… கடுப்பான காயத்ரி.. ப்ளீஸ் அந்த மாறி கேட்காதீங்க..

விஜய் சேதுபதி நடிப்பில் செய்தி சீனு ராமசாமி இயக்கத்தில் கடந்த வாரம் ரிலீசான திரைப்படம் மாமனிதன். இந்த திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா மற்றும் இளையராஜா ஆகியோர் சேர்ந்து இசையமைத்திருந்தார். யுவன் சங்கர் ராஜா இப்படத்தை தயாரித்து இருந்தார்.

இப்படத்தின் சிறப்பு காட்சியை பிரபலங்களுக்கு திரையிட்டு காட்டப்பட்டது. அப்போது அந்த காட்சி முடிந்தவுடன் அதில் கதாநாயகியாக நடித்திருந்த காயத்ரியிடம் பத்திரிக்கையாளர்கள் கேள்வி கேட்டனர்.

அப்போது ஒரு பத்திரிக்கையாளர், ‘ நீங்கள் ஐந்தாவது முறையாக விஜய் சேதுபதியுடன் ஜோடியாக நடித்துள்ளீர்கள். இதனை எப்படி உணர்கிறீர்கள்?’ என்று கேட்டவுடன் சட்டென அவரிடம் கோபித்து மைக்கை திருப்பி கொடுத்துவிட்டார்.

ஏன் என்னை பற்றி எந்த கேள்வியும் கேட்க மாட்டேங்கிறீங்க? நான் எவ்வளவு கஷ்டப்பட்டு இப்படத்தில் நடித்துள்ளேன் தெரியுமா? என கோபப்பட்டார்.  உடனே அந்த பத்திரிக்கையாளர் அவரை சமாதான படுத்துவதற்காக, சாரி மேம், உங்களை பற்றி சொல்லுங்கள் எனக்கு கூறவே,

உடனே,காயத்ரி, ‘ இந்த படத்தில் கிராமத்து பெண்ணாக நடிக்க வேண்டி இருந்தது. அதனால் எந்தவித மேக்கப்பும் உபயோகப்படுத்த கூடாது என்று இயக்குனர் சொல்லிவிட்டார். மேலும் இரண்டு குழந்தைகளுக்கு அம்மா என்பதால் கொஞ்சம் உடல் பருமனாக வேண்டும் என கூறியிருந்தார். அதனை செய்தேன்.’  என்று மாமனிதன் ஷூட்டிங் அனுபவங்களை குறிப்பிட்டிருந்தார் நடிகை காயத்ரி.

இதையும் படியுங்களேன் – இந்த டிடி ஷாரூக்கானையும் விட்டுவைக்கவில்லையா.?! வெளியான ஷாக்கிங் புகைப்படம்…

விஜய் சேதுபதியுடன், காயத்ரி இதுவரை நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம், புரியாத புதிர், ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன், சூப்பர் டீலக்ஸ், மாமனிதன் ஆகிய திரைப்படங்களில் ஹீரோயினாக நடித்துள்ளார். மேலும் ரம்மி, சீதக்காதி , விக்ரம் போன்ற விஜய்சேதுபதி படங்களில் நடித்துள்ளார் காயத்ரி.

Manikandan
Published by
Manikandan