
Cinema News
கன்னட சினிமாவில் மொக்கையா நடிச்சிட்டு இருந்தேன்!. நடிகை வாழ்க்கையை மாற்றி அமைத்த பாலசந்தர்!..
Published on
By
சிவாஜி, எம்.ஜி.ஆர் காலக்கட்டத்திற்கு பிறகு தமிழ் சினிமாவில் நிறைய புது முகங்கள் அறிமுகமாகின. அதற்கு இயக்குனர்களே காரணமாக இருந்தனர். பாரதி ராஜா, பாலச்சந்தர் மாதிரியான இயக்குனர்கள் அப்போது பல புது முகங்களை தமிழ் சினிமாவிற்கு அறிமுகப்படுத்தினர்.
அப்போது தமிழ் சினிமாவில் நடிப்புக்கு முக்கியத்துவம் இருந்ததால் பலருக்கும் அது பல நன்மைகளை செய்தது. தமிழில் பைரவி திரைப்படம் மூலமாக அறிமுகமானவர் நடிகை கீதா. இவரை சிவகாசி, அழகிய தமிழ் மகன் போன்ற திரைப்படங்களில் அம்மா கதாபாத்திரத்தில் பார்க்கலாம்.
ஆரம்பத்தில் தமிழ் சினிமாவிற்கு இவர் வரும்பொழுது தமிழை விட கன்னட சினிமாவில் அதிக வாய்ப்புகள் கிடைத்தது. இதனால் தமிழ் சினிமாவை விட்டு வெளியே சென்று கன்னட சினிமாவில் நடிக்க துவங்கினார் கீதா. ஆனால் கன்னட சினிமாவில் நடிப்பிற்கு பெரிதாக முக்கியத்துவம் இருக்கவில்லை.
அனைத்து படங்களிலுமே கதாநாயகிக்கு ஒரே மாதிரியான கதாபாத்திரமே இருந்தது. மேலும் கன்னட சினிமா அப்போது பெரிதாக பிரபலமாகவும் இல்லை. இதனால் திரும்ப தமிழ் சினிமாவிற்கு வருவதற்கான வாய்ப்புக்காக காத்திருந்தார் கீதா.
பாலசந்தர் கொடுத்த வாய்ப்பு:
இந்த நிலையில் தமிழில் புது புது அர்த்தங்கள் என்கிற திரைப்படத்தை இயக்கவிருந்தார் இயக்குனர் பாலசந்தர். இந்த படத்தில் கதாநாயகிக்கு ஆள் தேடும்போது கீதாவை நடிக்க வைக்கலாம் என பாலச்சந்தர் முடிவு செய்தார். படத்தில் கதாநாயகிக்கு முக்கிய கதாபாத்திரம் இருந்தது. அந்த படம் வெளியான பிறகு கீதா மிகவும் பிரபலமானார்.
அதனை தொடர்ந்து தமிழ், மலையாளம் என தென்னிந்தியா முழுவதும் வாய்ப்புகளை பெற்றார். ஒரு பேட்டியில் அவர் கூறும்போது பாலச்சந்தர் ஒரு தனித்துவமான இயக்குனர். அவர் அதிகமாக நடிப்பை எதிர்பார்ப்பவர். கன்னடத்தில் நடிப்புக்கு முக்கியத்துவம் இல்லை என இந்த விஷயங்களை விளக்கியிருந்தார் கீதா.
இதையும் படிங்க: நீங்க வேஸ்ட்!. நம்பியாரிடம் நான் கத்தி சண்டை போடுகிறேன்: எம்.ஜி.ஆரிடம் கோபப்பட்ட பானுமதி..
Parasakthi: அமரன் படத்திற்கு பின் சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் பராசக்தி படத்தில் நடிக்க தொடங்கினார். இந்த படத்தில் சிவகார்த்திகேயன் மட்டுமில்லாமல்...
STR49: வெற்றிமாறன் இயக்கத்தில் கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்க சிம்பு நடிப்பில் ஒரு படம் உருவாகவுள்ளதாக சில மாதங்களுக்கு முன்பு அறிவிப்பு வெளியானது....
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் நடித்து வெளியான குட் பேட் அக்லி சூப்பர் ஹிட் அடித்ததால் அஜித்தின் அடுத்த படத்தையும் ஆதிக்கே...
AK64: ஆதிக் ரவிச்சந்திரன் அடிப்படையில் ஒரு தீவிரமான அஜித் ரசிகர். திரிஷா இல்லனா நயன்தாரா என்கிற திரைப்படம் மூலம் கோலிவுட்டில் இயக்குனராக...
Karuppu Movie: சூர்யாவின் நடிப்பில் அடுத்து வெளியாக காத்துக் கொண்டிருக்கும் திரைப்படம் கருப்பு. ஆர்.ஜே.பாலாஜி இயக்கும் இந்தப் படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக...