×

சீக்கிரம் சரி ஆகிடும் செல்லம்!... 96 பட ஜானுவுக்கு கொரோனா பாதிப்பு...

 
சீக்கிரம் சரி ஆகிடும் செல்லம்!... 96 பட ஜானுவுக்கு கொரோனா பாதிப்பு...

விஜய் சேதுபதி நடித்த 96 திரைப்படத்தில் சிறுவயது திரிஷாவாக ஜானு என்கிற கதாபாத்திரத்தில் நடித்தவர் கவுரி கிஷான். விஜய் நடித்த மாஸ்டர் திரைப்படத்திலும் ஒரு முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். தற்போது சில மலையாள திரைப்படங்களிலும் நடித்து வருகிறார்.

இந்நிலையில், அவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். இந்த தகவலை இன்ஸ்டாகிராமில் தெரிவித்துள்ள அவர் ‘ எனக்கு கொரோனா இருப்பது பரிசோதனையில் தெரியவந்துள்ளது. எனவே, வீட்டிலேயே தனிமைப்படுத்திக்கொண்டு சிகிச்சை பெற்று வருகிறேன். என் மருத்துவரின் ஆலோசனைகளை பின்பற்றி வருகிறேன். கவலைப்பட எதுவுமில்லை. விரைவில் நலம் பெற்றுவிடுவேன். அதுவரை உங்கள் வாழ்த்துக்களை படித்து வருகிறேன். அதில் விரைவில் குணமடைவேன்’ என பதிவிட்டுள்ளார்.

From around the web

Trending Videos

Tamilnadu News