×

மாஸ்டர் டெலீட்டட் சீன் சர்ச்சை... என்ன நடந்தது.. கௌரி கொடுத்த விளக்கம்!

மாஸ்டர் டெலீட்டட் சீன் சர்ச்சை பற்றி கௌரி கிஷன் விளக்கம் கொடுத்திருக்கிறார். 
 
 

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் - விஜய் சேதுபதி முதல்முறையாக இணைந்து நடித்த மாஸ்டர் பல ரெக்கார்டுகளை உடைத்திருக்கிறது. உலக அளவில் 200 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்திருக்கிறது. கொரோனாவுக்குப் பின்னரான சூழலில் ரசிகர்களைத் தியேட்டர்களுக்கு அழைத்து வந்ததில் மாஸ்டர் மிகப்பெரிய சக்சஸை எட்டியிருக்கிறது. 

மாஸ்டர் படத்தின் 25வது நாளை ஒட்டி அந்தப் படத்தில் இருந்து நீக்கப்பட்ட காட்சிகளை அமேசான் பிரைம் வெளியிட்டிருந்தது. அதில் தோனி பற்றியும் பெண்களை அவர்கள் அணியும் ஆடையை வைத்தே எத்தனை நாட்கள்தான் நாம் குறைத்து மதிப்பிடப் போகிறோம் என்பது பற்றியும் விஜய் பேசியிருந்த காட்சிகள் வைரலாகி வருகின்றன. 


இந்தநிலையில், மாஸ்டர் நீக்கப்பட்ட காட்சிகளில் விஜய்யுடன் நடித்திருந்த கௌரி கிஷன், சிரித்திருந்தார் என்றும் அதனாலேயே அந்தக் காட்சிகள் நீக்கப்பட்டன என்றும் ஒரு தகவல் வைரலாகப் பரவி வருகிறது. இதுகுறித்து முன்னணி இணையதள ஊடகம் ஒன்றுக்கு கௌரி பேட்டி கொடுத்திருக்கிறார். அதில், ``இந்த சீன் ரிலீஸானதுக்கு அப்புறம், அந்த சீன்ல நான் சிரிச்சேன் அப்டின்னு கொஞ்சம் டாக்ஸ் வர ஆரம்பிச்சுச்சு. `சீரியஸான சூழ்நிலைல சில கேரக்டர்கள் சிரிப்பாங்க. சவிதா அப்டிதான்’ இப்டிலாம் நிறைய மீம்ஸ் வர ஆரம்பிச்சுச்சு. நானும் சிரிச்சுக்கிட்டே அதைக் கடந்து போய்ட்டேன். அதை நான் என் பிரண்ட்ஸ்கிட்டயும் ஷேர் பண்ணேன். 

இப்போ ரீசண்ட்டா அதனாலதான் அந்த சீன் டெலீட் ஆச்சுன்னு ஒரு டாக்ஸ் ஓடிட்டு இருக்கு. அது உண்மையில்லைனு நான் நினைக்கிறேன். அப்படி ஒரு சீரியஸான சூழ்நிலைல நாமளும் அந்த கேரக்டராவே தான் இருப்போம். நாம எக்ஸ்பிரஸ் பண்ணது சில பேருக்கு சிரிக்குற மாதிரி தெரிஞ்சிருக்கலாம். சிலரோட எக்ஸ்பிரசன் அப்படித் தெரியலாம். ஆனால், நான் அந்த சூழ்நிலைல சிரிக்கலை என்பதைத் தெளிவுபடுத்திக்க விரும்புகிறேன். அப்படி தப்பா தெரிஞ்சிருக்கலாம். நீங்க லோகேஷ் சார்கிட்ட பேசிக்குட தெளிவுபடுத்திக்கலாம். 


டப்பிங் முடியுற வரைக்கும் எங்களுக்கு அப்படி தோணலை. ஒருவேளை நான் சிரிக்குற மாதிரி தெரிஞ்சிருந்தா அவங்க டப்பிங்கே பண்ணிருக்க மாட்டாங்க. ஆனால், நாங்க ஏற்கனவே டப்பிங் பண்ணி ரெடி பண்ணிட்டோம். எடிட்டிங் டேபிள்ல கட் ஆகியிருக்கலாம். ஆனா நிறைய பேரு இதுதெரியாம நியூஸ் போடுறாங்க. குறைந்தபட்ச விளக்கம் கேட்டுட்டுதான் நியூஸ் போடணும்’’ என்று விளக்கம் கொடுத்திருக்கிறார். 


 

From around the web

Trending Videos

Tamilnadu News