×

சென்னையில் அந்த பள்ளியில் எனக்கும் அது நடந்தது! - 96 பட நடிகை பகீர் புகார்

 
gowri

சென்னை கே.கே.நகரில் உள்ள பத்ம சேஷாத்ரி பால பவன் பள்ளி பாலியல் புகாரில் சிக்கியிருப்பது அப்பள்ளியில் படிக்கும் பெற்றோர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அப்பள்ளி ஆசிரியர் ராஜகோபாலன் என்பவர் கடந்த 15 வருடங்களாக அங்கு பள்ளியில் படிக்கும் பிளஸ் ஒன், பிளஸ் டூ மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார்.

ஆன்லைன் வகுப்பில் அரை குறை ஆடையுடன் வருவது, மாணவிகளுக்கு ஆபாச குறுஞ்செய்திகள் வாட்ஸ் அப்பில் அனுப்புவது, இதை எதிர்க்கும் மாணவிகளை வகுப்பில் திட்டுவது, மதிப்பெண்களை குறைத்துவிடுவேன் என மிரட்டுவது, ஆபாச படங்களை அனுப்ப சொல்லி வற்புறுத்துவது என பல பாலியல் சீண்டல்களை அவர் செய்துள்ளார். தற்போது அவர் போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த விவகாரம் சமூகவலைத்தளங்களில் விவாதப்பொருளாக மாறியுள்ளது.

psbb

இந்நிலையில், 96,  மாஸ்டர், கர்ணன் ஆகிய படங்களில் நடித்த நடிகை கௌரி கிஷான் சென்னை அடையாற்றில்  தான் படித்த ஹிந்து சீனியர் மேல்நிலைப்பள்ளி (HSS School, Adayar) தனக்கு பாலியல் தொல்லை ஏற்பட்டதாக பரபரப்பு புகாரை கூறியுள்ளார். தனது சமூக வலைதள பக்கத்தில் அவர் இட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:

மாணவிகள் இதுபோன்ற கொடுமையை சந்திப்பது ஒன்றும் புதிதல்ல. நான் அடையாறு ஹிந்தி சீனியர் மேல்நிலை பள்ளியில் படித்த போது நானும் இது போன்ற பிரச்சனைகளை எதிர்கொண்டேன். இது போன்ற கொடுமைகளுக்கு உடனடியாக ஒரு தீர்வு கிடைக்க வேண்டும். நான் படித்த ஹிந்து சீனியர் மேல்நிலை பள்ளியில் படித்தவர்கள் அவர்களுக்கு ஏற்பட்ட கொடுமைகளை பற்றி பேச முன் வரவேண்டும்.

gowri

பள்ளி பருவத்தில் இதுபோன்ற கசப்பான அனுபவங்களை எனக்கு ஏற்படுத்திய ஆசிரியர்களின் பெயரை நான் இங்கே குறிப்பிட விரும்பவில்லை. நீண்ட வருடங்களாக என் மனதில் இருந்த பாரத்தை இறக்கி வைத்துள்ளேன். இந்த கொடுமையை சந்தித்த மற்றவர்களும் இதுபற்றி பேச முன் வந்தால் ஒரு தீர்வு காண முடியும். பாடகி சின்மயி மற்றும் கிஷன் தாஸ் போன்றாவர்கள் இந்த பிரச்சனைகள் குறித்து பேச முன் வரவேண்டும்’ என அவர் பதிவிட்டுள்ளார். 

From around the web

Trending Videos

Tamilnadu News