அட நம்ம தமன்னா, நயன்தாரா, சமந்தா எல்லாம் ஒன்னாவா?!.. AI அலப்பறை தாங்கலயே!...
AI என சொல்லப்படும் (Artificial Inteligence) செயற்கை நுண்ணறிவு வந்தபின் இப்போது நடக்க்க வாய்ப்பே இல்லாத விஷயங்கள் கூட நடந்து கொண்டிருக்கிறது. மனிதனால் கற்பனை செய்து பார்க்கும் அல்லது கற்பனை செய்து கூட பார்க்க முடியாத பல விஷயங்களை செய்து கொடுக்கிறது AI . அதேபோல், மனிதன் ஆசைப்படுவதையெல்லாம் AI செய்து தருகிறது. AI மூலம் எதுவும் சாத்தியம் என்கிற நிலை உருவாகி இருக்கிறது. நடிகர் கமல் கூட சில மாதங்கள் அமெரிக்கா சென்று AI பற்றி தெரிந்துகொண்டு வந்தார்.

சமீபத்தில் கூட ரஜினி, கமல், விஜய், அஜித், சூர்யா,விக்ரம் போன்ற நடிகர்கள் டீக்கடையில் ஒன்றாக அமர்ந்திருப்பது போலவும், ஒன்றாக நடந்து வருவது போலவும் AI -ல் உருவாக்கிய புகைப்படங்கள் சமூகவலைதளங்களில் வைரலானது. அதேபோல் கோட் படப்பிடிப்பில் அஜித் இருப்பது போலவும் AI -ல் உருவாக்கி புகைப்படங்களை வெளியிட்டார்கள்.

இந்நிலையில்தான் நடிகைகள் தமன்னா, நயன்தாரா, சமந்தா, கீர்த்தி சுரேஷ், பூஜா ஹேக்டே உள்ளிட்ட சில நடிகைகள் கடற்கரையில் மணல் வீடு கட்டி விளையாடுவது போலவும், தசரா விழாவில் அவர்கள் நடனமாடுவது போலவும், ஒரு கோவிலின் வாசலில் பூ வாங்குவது போலவும், கையில் குடத்தை வைத்துக்கொண்டு தண்ணீர் பிடிப்பது போலவும் AI -ல் புகைப்படங்களை உருவாக்கி சிலர் சமூகவலைத்தளங்களில் பதிவிட்டுள்ளனர். இந்த புகைப்படங்கள் ரசிகர்களை கவர்ந்து இணையத்தில் வைரலாகி வருகிறது.

நிஜ வாழ்வில் இதெல்லாம் நடக்க வாய்ப்பில்லை என்பதால் இந்த புகைப்படங்கள் ரசிகர்களிடம் புதிய அனுபவத்தை உருவாக்கி உருவாக்குகிறது.
