Categories: Cinema News latest news throwback stories

எப்பா குளிச்சது தப்பா?.. ஜெயலலிதாவின் அந்த ஒரு காட்சியால் ‘A’ சர்டிவிக்கேட் பெற்ற திரைப்படம்!..

அந்த காலத்தில் ஜெய்சங்கர் எப்படி காலத்திற்கு ஏற்ப அணுகுமுறைகளை மாற்றினாரோ அதே மாதிரி ஜெயலலிதாவும் காலத்திற்கு ஏற்றப்படி ஆடைகளிலும் மாற்றத்தை கொண்டு வந்தார். புடவை, தாவாணி, சுடிதார் என்று தமிழ்நாட்டு கலாச்சாரத்திற்கு ஏற்ப அன்றைய காலகட்ட நடிகைகள் உடைஅணிந்த் நடித்து வந்தனர்.

jaya1

ஆனால் ஜெயலலிதாவோ டி-சர்ட் பேண்ட், ஸ்லீவ்லெஸ் ஜாக்கெட், குட்டை பாவாடை என முற்றிலும் மாறுபட்டு சினிமாவிற்குள் நுழைந்தார். ஆரம்பத்தில் இது அனைவருக்கும் ஆச்சரியமாக தான் இருந்தது. கான்வெண்ட்டில் படித்தவர், ஆங்கிலம் நன்றாக பேசத் தெரிந்தவர், முற்போக்கு சிந்தனை கொண்டவர் என மாறுபட்டு இருந்தார்.

இதையும் படிங்க : ஒரே படத்துக்காக மோதிய எம்.ஜி.ஆர் – ஸ்ரீதர்!.. கலைவாணர் சொன்ன ஒரு வார்த்தை.. அடங்கிய மக்கள் திலகம்..

இவரின் நடிப்பில் முதன் முதலில் வெளிவந்த படம் ‘வெண்ணிறாடை’ திரைப்படம். இந்த படம் ஜெயலலிதாவிற்கு மட்டும் அறிமுகம் இல்லை. அந்த படத்தில் நடித்த நிர்மலா மற்றும் காமெடி நடிகர் மூர்த்தி ஆகிய இருவருக்கும் வெண்ணிறாடை படம் தான் முதல் படம்.

jaya2

அதனால் தான் அவர்கள் பெயருடன் வெண்ணிறாடை நிர்மலா, வெண்ணிறாடை மூர்த்தி என மாற்றிக் கொண்டனர். இந்த படத்தை ஸ்ரீதர் இயக்கி தயாரித்திருந்தார். 1965 ஆம் ஆண்டு வெளியான இந்த படம் தணிக்கை குழுவுக்கு சென்றது. குடும்ப கதையம்சம் கொண்ட வெண்ணிறாடை திரைப்படம் கண்டிப்பாக யு சர்ட்டிவிக்கேட் பெறும் என்ற நம்பிக்கையுடன் இருந்த ஸ்ரீதருக்கு ஏமாற்றமே மிஞ்சியது.

தணிக்கை குழு படத்திற்கு ஏ சர்டிவிக்கேட் சான்றிதழை வழங்கியது. ஸ்ரீதர் எதனால் யு சான்றிதழ் கொடுக்க வில்லை என தணிக்கை குழுவுடன் எவ்வளவோ கேட்டும் அவர்கள் சரியான பதிலை கூறவில்லை. அதன் பிறகு தான் விபரம் ஸ்ரீதருக்கு தெரிய வந்திருக்கிறது. இந்த படத்தில் ஜெயலலிதா போட்ட ஜாக்கெட்டால தான் ஏ சர்டிவிக்கேட் சான்றிதழை கொடுத்திருக்கிறதாம்.

jaya3

அதுவும் அந்த படத்தில் சுசீலா குரலில் ஜெயலலிதா ஒரு பாடல் காட்சியில் அருவியில் குளிப்பது போன்று படமாக்கப்பட்டிருக்கும். ‘அம்மம்மா காற்று வந்து ’ இது தான் அந்த பாடல். அந்த பாடலில் ஸ்லீவ்லெஸ் ஜாக்கெட் அணிந்து குளித்து கொண்டிருப்பார் ஜெயலலிதார். இந்த ஒரு காட்சிக்காகவே தணிக்கை குழு ஏ சர்டிவிக்கேட் சான்றிதழை கொடுத்ததாக தகவல் கிடைத்ததாம் ஸ்ரீதருக்கு.

அந்த காலத்திலேயே ஒரு ஸ்லீவ்லெஸ் ஜாக்கெட்டுக்கே இப்படின்னா இன்றைய காலத்தில் நடிகைகள் போட்டு வரும் உடைக்கு என்ன சான்றிதழ் கொடுப்பார்கள் என்று யோசிக்கத்தான் வைக்கிறது.

Rohini Sub Editor
நான் ரோகிணி. இந்த இணையதளத்தில் கடந்த 4 ஆண்டுகளாக செய்தி பிரிவில் சப் எடிட்டராக பணியாற்றுகிறேன். சினிமா தொடர்பாக அனைத்து செய்திகள் குறிப்பாக விமர்சனம், பழைய சினிமா தகவல்களை தருவதில் அதிக விருப்பம் உடையவர்.
Published by
Rohini