Connect with us
Jayshree

Cinema News

முதல் படத்திலேயே நீச்சல் உடையில் அசத்திய நடிகை!… 80ஸ் இளசுகளைக் கவர்ந்த ஜெயஸ்ரீ!…

தமிழ்ப்பட உலகில் பல நடிகைகள் அறிமுகமான புதிதில் தயங்கி தயங்கி நடிப்பார்கள். சிலர் படத்தில் நடிக்கும் போது இது தான் முதல் படமா என்று கேட்கத் தோன்றும். அந்தளவுக்கு பிரமாதமான நடிப்பில் ஜொலிப்பார்கள். அந்த வகையில் முதல் படத்திலேயே நீச்சல் உடையுடன் அசத்திய நடிகை தான் இவர். யார் என்று பார்க்கலாமா…

1985ல் வெளியான படம் தென்றலே என்னைத் தொடு. மோகனுக்கு ஜோடியாக நடித்தவர் ஜெயஸ்ரீ. தேங்காய் சீனிவாசன், வெண்ணிற ஆடை மூர்த்தி, ஒய்.ஜி.மகேந்திரன், காந்திமதி என பலர் நடித்துள்ளனர்.

படம் அந்தக் காலகட்டத்தில் பட்டி தொட்டி எங்கும் பட்டையைக் கிளப்பியது. இளையராஜாவின் இசையில் பாடல்கள் ஒவ்வொன்றும் செம மாஸாக இருந்தது.

ஸ்ரீதரின் இயக்கத்தில் இது வழக்கமான படங்களில் இருந்து முற்றிலும் மாறுபட்டதாக இருந்தது. படத்தின் கதைப்படி நாயகன் விலகிச் செல்வான். அவனை இளம்பெண்கள் சூழ்ந்து கொள்வர். அதைப் பார்த்து கதாநாயகிக்கு பொறாமை பொத்துக்கொண்டு வரும். இது எல்லாப் படங்களிலும் இருப்பது போல இருந்தாலும், படம் இளமைத் துள்ளலுடன் பார்ப்பதற்கு ஜோராக இருக்கும்.

ஜெயஸ்ரீ இந்தப் படத்தில் தான் அறிமுகம். அவர் வேறு யாருமல்ல. பழம்பெரும் பாடகி எஸ்.ஜெயலெட்சுமியின் பேத்தி. இவரது தாத்தாக்கள் எஸ்.ராஜம், எஸ்.பாலசந்தர் என எல்லாருமே இசை அமைப்பாளர்கள். இவர்களில் எஸ்.பாலசந்தர் தயாரிப்பு, இயக்கம் என அனைத்து துறைகளிலும் செயல்பட்டு பத்ம பூஷண் விருதும் வாங்கியுள்ளாராம்.

Thendrale Ennai Thodu

Thendrale Ennai Thodu

படத்தில் புதிய பூவிது பூத்தது பாடல் அப்போது வானொலிகளிலும், திருமண வீடுகளிலும் ஒலிக்காத நாளே இல்லை எனலாம். இந்தப் பாடலுக்கு ஜெயஸ்ரீ நீச்சல் உடையில் வாளிப்பான உடலுடன் வந்து இளம் ரசிகர்களை கவர்ச்சி வலைவிரித்து வளைத்துப் போட்டார். இந்தப் பாடலுக்காகவே இளசுகள் மீண்டும் மீண்டும் படத்தைப் பார்க்க திரையரங்கிற்குப் படையெடுத்தனர்.

ஜெயஸ்ரீ 1988ல் திருமணம் செய்து கொண்டார். ஆனால் அதுவரை சினிமாவில் பிஸியாகவே நடித்துக் கொண்டு இருந்தார். 1997ல் கே.எஸ்.ரவிக்குமாரின் இயக்கத்தில் கார்த்திக் நடிப்பில் வெளியான பிஸ்தா, 2014ல் வெளியான காதல் 2 கல்யாணம், 2016ல் மணல் கயிறு 2 என ஒரு சில படங்களில் தலைகாட்டினார்.

தற்போது கணவர் மற்றும் குழந்தைகளுடன் அமெரிக்காவில் செட்டில் ஆகி விட்டார். ஸ்ரீதர் அறிமுகப்படுத்திய நடிகைகளில் சுமாராக நடிப்பவர் யார் என்றால் அது ஜெயஸ்ரீ தான். என்ன தான் இருந்தாலும் அதை ஒரு பெரிய குறையாக சொல்ல முடியாத அளவுக்கு அவரது அழகு ரசிகர்களைத் திணறடித்தது என்றே சொல்லலாம்.

author avatar
sankaran v
பி.ஏ பட்டதாரியான இவர் ஊடகத் துறையில் 13 ஆண்டுகளாக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, ஆன்மிகம்,லைப் ஸ்டைல் கட்டுரைகளை வழங்கி வந்தார். கடந்த 4 ஆண்டுகளாக சினி ரிப்போர்டஸ் தளத்தில் உதவி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
Continue Reading

More in Cinema News

To Top