
Cinema News
70களில் கமல், சிவகுமாருடன் நடித்து தமிழ்சினிமாவைக் கலக்கிய ஜெயசுதா – ஒரு பார்வை
Published on
வட்டவடிவ அழகி…வசீகர சிரிப்பழகி…12 வயதில் சினிமா உலகில் கால் பதித்தார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என பன்மொழிப்படங்களில் நடித்தவர். மாநில விருதுகள் பலவற்றை பெற்றவர். யதார்த்த நடிகை என பெயர் பெற்றவர். சுபாஷினியின் மூத்த சகோதரி. இவரது அத்தை விஜயநிர்மலா.
தெலுங்கு தாய்மொழி என்றாலும் பிறந்து வளர்ந்தது எல்லாம் சென்னையில் தான். அவர் தான் ஜெயசுதா. திரையுலகில் அவர் கடந்து வந்த பாதையைப் பார்ப்போம்.
அரங்கேற்றம் படத்தில் பிரமிளாவின் தங்கை, சொல்லத்தான் நினைக்கிறேன் படத்தில் ஜெயசித்ரா வின் தோழி சுதா, அபூர்வ ராகங்களில் ரஞ்சனியாக என நடிப்பில் தனி முத்திரை பதித்தார் நடிகை ஜெயசுதா. பட்டாக்கத்தி பைரவன் படத்தில் எங்கெங்கோ செல்லும் என் எண்ணங்கள் என்ற பாடலில் சிவாஜியுடன் இணைந்து நடித்து அசத்தியிருந்தார்.
Jayasutha
ஆந்திராவில் செகந்திராபாத் தொகுதியில் சட்டமன்ற உறுப்பினராகப் பதவி வகித்தார். நடிகை, எம்எல்ஏ என பன்முகத்திறன் கொண்டவர்.
1958ல் ஆந்திராவின் விஜயநகரத்தைப் பூர்வீகமாகக் கொண்ட தாயாருக்கும், திருப்பதியைப் பூர்வீகமாகக் கொண்ட தந்தைக்கும் பிறந்த செல்ல மகள். இவருடன் பிறந்த இளைய சகோதரி சுபாஷினி.
இவர் தான் ஆசையைக் காத்துல தூதுவிட்டு என்ற பாடலுக்கு அற்புதமாக நடனமாடியிருந்தார்.
இவரது இல்லம் சென்னை சேப்பாக்கம் அருகில் உள்ள கிரிக்கெட் மைதானம் அருகில் தான் இருந்தது. இதனால் கிரிக்கெட் மீதான ஆர்வமும் அவருக்கு அதிகரித்தது. இயற்கையிலேயே கலை ஆர்வமும் கொண்டவராக இருந்தார். இதனால் அவரது பெற்றோர் அவருக்கு நடனம் கற்பிக்க நடன குருமார்களிடம் சேர்த்தனர். பள்ளிப்படிப்புடன் கலைஞானமும் சேர்ந்தே வளர்ந்தது.
இவரது அத்தை விஜயநிர்மலாவின் மூலமாக தெலுங்கு திரையுலகில் கால் பதித்தார். பள்ளிப்படிப்பைப் படிக்கும்போதே தனது 12வது வயதில் 1972ல் பண்டந்தி கற்பூரம் என்ற தெலுங்கு படத்தில் அறிமுகமானார். இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்ற போது தமிழ்த்திரை உலகம் இவரை அடையாளம் கண்டு கவர்ந்தது.
1973ல் கலாகேந்திரா பிலிம்ஸ் தயாரிப்பில் கே.பாலசந்தரின் இயக்கத்தில் அரங்கேற்றம் படத்தில் அறிமுகமானார். கமல், சிவகுமார், பிரமிளா நடித்த இந்தப்படம் சக்கை போடு போட்டது. இப்படத்தில் பிரமிளாவின் தங்கை, எம்என் ராஜம் மகள், கமலின் சகோதரி தேவி என்ற கதாபாத்திரத்தில் நடித்தார்.
Jayasutha2
இதே படம் 1974ல் தெலுங்கிலும், 1977ல் இந்தியிலும் ரீமேக்காகி மாபெரும் வெற்றி பெற்றது. அங்கும் ஜெயசுதாவே நடித்தார். சிவாஜியின் பாரதவிலாஸ் படத்தில் நடித்தார். சிவகுமாரின் காதலியாக நடித்தார். தொடர்ந்து 12ம் வகுப்பு வரை படித்தார்.
நடிகர் திலகம் சிவாஜியுடன் மன்னவன் வந்தானடி, பட்டாக்கத்தி பைரவன், ஜெய்சங்கருடன் பந்தாட்டம், பிராயசித்தம், சாவித்ரியுடன் பெத்த மனம் பித்து, ரவிச்சந்திரனுடன் பாக்தாத் பேரழகி, சிவகுமாருடன் சொல்லத்தான் நினைக்கிறேன்,
பட்டிக்காட்டு ராஜா, வெள்ளிக்கிழமை விரதம், ஜெமினிகணேசனுடன் நான் அவனில்லை, முத்துராமனுடன் தீர்க்கசுமங்கலி, கமலுடன் மேல்நாட்டு மருமகள், ஆயிரத்தில் ஒருத்தி, அபூர்வ ராகங்கள், ரஜினியுடன் நினைத்தாலே இனிக்கும் உள்பட பல படங்களில் நடித்து அசத்தினார்.
Actress Jayasutha
நீண்ட இடைவெளிக்குப் பின் பாண்டியன் படத்தில் ரஜினியின் அக்காவாக நடித்தார். விஜயகாந்தின் ஜோடியாக ராஜதுரை, தவசியில் நடித்தார். பாரதிராஜாவின் இயக்கத்தில் அந்திமந்தாரை படத்தில் விஜயகுமாருக்கு ஜோடியானார்.
2000ல் மணிரத்னத்தின் அலைபாயுதே படத்திலும், சரத்குமாரின் 1977, நாகர்ஜூனாவின் தோழி ஆகிய படங்களிலும் நடித்தார். 1975ல் ராசலீலா படத்தின் மூலம் மலையாளப்பட உலகில் ஜொலித்தார். இவர் நிதின் கபூரை மணந்தார். இவருக்கு இரு பிள்ளைகள் உள்ளனர்.
Ajith: நடிகர் அஜித்துக்கு சினிமாவில் நடிப்பது மாதிரி கார் ரேஸில் கலந்து கொள்வதிலும் அதிக ஆர்வம் உண்டு. மனைவி ஷாலினி கேட்டுக்...
Idli kadai: பாக்கியராஜின் உதவியாளரான பார்த்திபன் புதிய பாதை என்கிற திரைப்படம் மூலம் இயக்குனர் மற்றும் நடிகராக அறிமுகமானார். முதல் படத்திலேயே...
Idli kadai Review: தனுஷ் நடிப்பில் நேற்று வெளியான திரைப்படம் இட்லி கடை. இந்த படத்தை அவரே இயக்கியிருக்கிறார். இதற்கு முன்...
Vijay: விஜய் தொலைக்காட்சியில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்று பிக்பாஸ் நிகழ்ச்சி. இந்த நிகழ்ச்சியின் ஆறாவது சீசனில் போட்டியாளராகவும் கலந்து அந்த...
Idli kadai: ராயன் திரைப்படத்திற்கு பின் தனுஷ் இயக்கி நடித்திருக்கும் இட்லி கடை படம் நேற்று வெளியானது.. இந்த படத்தை ரெட்ஜெயண்ட்...