Connect with us
kalyani

Cinema News

அந்த இசையமைப்பாளர் என்னை கண்ட இடத்தில் தொட்டார்…. பரபரப்பை கிளப்பிய நடிகை…!

கோலிவுட்டில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பின்னர் தொகுப்பாளியாக வலம் வந்தவர் தான் நடிகை கல்யாணி. இவர் ஜெயம் ரவி நடிப்பில் வெளியான ஜெயம் படத்தில் நடிகை சதாவிற்கு தங்கையாக நடித்திருப்பார். இதுதவிர பல சீரியல்களிலும் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானவர் தான் கல்யாணி.

பின்னர் ஒரு கட்டத்தில் திருமணம் செய்து கொண்டு வெளிநாட்டில் செட்டிலாகி விட்டார். இந்நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற கல்யாணி சிறு வயதில் தனக்கு நேர்ந்த பாலியல் தொல்லைகள் குறித்து வெளிப்படையாக பேசியுள்ளார். தற்போது இவரின் அந்த பேட்டி திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

kalyani

kalyani

அவர் கூறியிருப்பதாவது, “தற்போது தமிழ் சினிமாவில் பிரபல இசையமைப்பாளராக இருக்கும் அவர் அந்த சமயத்தில் எங்கள் குடும்பத்திற்கு நெருங்கிய நண்பராக இருந்தார். அப்போது எனக்கு எட்டு வயது இருக்கும். அவர் நான் தூங்கும் போது என்னை தேவை இல்லாத இடங்களில் தொடுவார்.

இவ்வாறு ஒருத்தர் நம்மை தொடும் போது நமக்கு ஒரு மாதிரியாக இருக்கும். அந்த உணர்வு ஏற்படும். அப்போது நான் தூக்கத்தில் இருந்து முழித்து விடுவேன். இருந்தாலும் பயத்தில் கண்ணை மூடிக்கொண்டு அமைதியாக இருப்பேன். அவர் தேவையில்லாமல் கைகளை என் மீது வைப்பார். அதை இப்போது நினைத்தால் கூட எனக்கு கஷ்டமாக இருக்கிறது.

kalyani

kalyani

இந்த விஷயத்தை நான் எங்கேயும் சொன்னதில்லை. என்னுடைய அம்மாவிடம் கூட நான் சொன்னதில்லை. முதல் முறையாக என் கணவரிடம் தான் இதை சொன்னேன். அவரும் என் சூழ்நிலையை புரிந்துகொண்டு என்னை சமாதானம் செய்தார். இப்போது நினைத்தால் கூட எனக்கு அருவருப்பாக இருக்கிறது” என கூறியுள்ளார்.

ஆனால் இறுதிவரை கல்யாணி அந்த பிரபல இசையமைப்பாளர் யார் என்பதை கூறவில்லை. இதனால் அவர் யாராக இருக்கும் என்பது போன்ற யூகங்கள் தற்போது கோலிவுட்டில் நிலவி வருகிறது. மேலும் இந்த விஷயம் பிரபலங்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

author avatar
ராம் சுதன்
Continue Reading

More in Cinema News

To Top