Categories: latest news throwback stories

ரஜினிக்கும் உங்களுக்கும் கல்யாணம்னு நியூஸ் வந்துச்சே!.. என்ன மேட்டர்?.. ஓபனா பேசிய பிரபல நடிகை!..

ரஜினி, விஜய், அஜித் என முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்த சீனியர் நடிகை கவிதா சமீபத்தில் அளித்த பேட்டியில் பல சுவாரஸ்ய தகவல்களை பகிர்ந்து கொண்டார்.

1976ம் ஆண்டு ஓ மஞ்சு படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானவர் நடிகை கவிதா. நடிகர் விஜய் நடித்த முதல் படமான நாளை தீர்ப்பு மற்றும் அஜித் நடித்த முதல் படமான அமராவதி உள்ளிட்ட படங்களில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்தவர் கவிதா.

இதையும் படிங்க: லியோ படத்தை தூக்கிட்டு எம்ஜிஆர் படத்தை திடீரென மாற்றிய உட்லண்ட்ஸ் தியேட்டர்.. சென்னையிலயே பாவம்!..

நடிகர் ரஜினிகாந்த் உடன் திருமணம் என அப்போது மிகப்பெரிய செய்தியே வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அது குறித்த கேள்விக்கும் அழகாக பதில் அளித்துள்ளார் கவிதா.

சுமார் 400க்கும் மேற்பட்ட படங்களில் நடித்த இவர், தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் என தென்னிந்திய மொழிகளில் நடித்து அசத்தி உள்ளார். சின்னத்திரையிலும் புகுந்து ஒரு கலக்கு கலக்கிய கவிதா நடிகர் ரஜினிகாந்த் உடன் உழைப்பாளி படத்தில் நடித்துள்ளார்.

இதையும் படிங்க: விஜய் கூப்பிட்டும் போகல!.. உயிர் நண்பனிடம் 5 மாசம் பேசமால் இருந்த தளபதி!..

நடிகர் ரஜினிகாந்துக்கும் எனக்கும் திருமணம் என சுமார் ஒன்றரை பக்கத்திற்கு ஒரு பிரபல நாளிதழில் செய்தியே வந்துடுச்சு.. அப்போது எனக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. எஸ்.பி. முத்துராமன் சார் எல்லாம் என்னை பார்த்து சிரித்து விட்டு சென்றார். திரையுலகில் இருப்பவர்கள் இதுபோன்ற கிசுகிசுக்களை சாதாரணமாகவே எடுத்துக் கொள்வார்கள்.

அந்த நேரத்தில் அந்த நாளிதழுக்கு என்ன தகவல் கிடைத்ததோ தெரியவில்லை. அப்படியொரு வதந்தியை கிளப்பி விட்டனர் என சிரித்துக் கொண்டே அந்த மேட்டரை பேசி விட்டு அந்த டாப்பிக்கில் இருந்து சட்டென வேறு ஒரு டாப்பிக்கிற்கு மாறிவிட்டார்.

Saranya M
Published by
Saranya M