×

துபாய் பிளாட் ஃபார்மில் நடிகை கீர்த்தி சுரேஷ்...!
 

சற்றுமுன் நடிகை கீர்த்தி சுரேஷ் வெளியிட்ட இன்ஸ்டாகிராம் பதிவு 
 
 

தமிழ் சினிமாவில் "இது என்ன மாயம்’ படத்தின் மூலம் அறிமுகமானவர் கீர்த்தி சுரேஷ். இதனையடுத்து ‘ரஜினி முருகன், தொடரி, ரெமோ, பைரவா, சாமி 2’ என முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்தார். தமிழ் மட்டுமின்றி, சில தெலுங்கு மற்றும் மலையாள படங்களிலும் கீர்த்தி சுரேஷ் நடித்திருக்கிறார்.

தெலுங்கில் இவரது நடிப்பில் வெளியான "மகாநடி" படம் கீர்த்திக்கு பேரும் , புகழும் பெற்றுத்தந்ததுடன் சிறந்த நடிகையாக அடையாளம் காட்டியது. இந்த படத்திற்காக கீர்த்தி சுரேஷிற்கு சிறந்த நடிகைக்கான தேசிய விருது வழங்கி கௌரவித்தனர். அதன் பின்னர் மார்க்கெட்டின் உச்சத்தில் தொடர்ந்து இருந்து வருகிறார்.

இந்நிலையில் தற்ப்போது கீர்த்தி சுரேஷ் துபாய்க்கு சென்று அங்குள்ள கடைகளில் ஷாப்பிங் செய்துவிட்டு பிளாட் ஃபார்மில் கூலாக நடந்துவரும் போது கிளிக் செய்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அதில் அவர் அணிந்திருக்கும் டீ ஷர்ட் தான் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. ஹலோ துபாய் ஆஹ்? என அச்சிடப்பட்டிருப்பதை இந்த பதிவின் கேப்ஷனாக கொடுத்துள்ளார். 

From around the web

Trending Videos

Tamilnadu News