#image_title
தமிழ் சினிமாவில் ஒரு முன்னணி நடிகையாக திகழ்ந்து வருபவர் நடிகை கீர்த்தி சுரேஷ். அவர் இப்போது சமூக வலைதளங்களில் மிகவும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறார். அவருக்கு டிசம்பர் மாதம் திருமணம் நடக்க போவதாகவும் பெற்றோர்கள் அதற்கான வேலைகளில் ஈடுபட்டிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கின்றது.
அதுவும் கீர்த்தி சுரேஷ் திருமணம் கோவாவில் நடைபெற வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது. ஏற்கனவே கீர்த்தி சுரேஷ் அவருடைய உறவினர் ஒருத்தருடன் டேட்டிங்கில் இருக்கிறார். அவரை தான் திருமணம் செய்யப் போகிறார் என்ற ஒரு வதந்தியும் அதோடு அனிருத் ரவிச்சந்திரனுடன் அவருக்கு திருமணம் நடைபெற போவதாகவும் பல்வேறு வதந்திகள் கொண்டே இருந்தன.
இதையும் படிங்க: கங்குவாக்காக களமிறங்கிய ஜோதிகா!.. அவரையும் விட்டு வைக்காத நெட்டிசன்கள்?!… இப்படி மாட்டிட்டீங்களே!..
மீண்டும் அவருடைய திருமணம் பற்றிய செய்தி சமூக வலைதளங்களில் ட்ரெண்டிங் ஆகி வருகிறது. கீர்த்தி சுரேஷ் திருமணத்தை டிசம்பர் மாதம் நடத்த போவதாகவும் இன்னும் கூடிய சீக்கிரம் அவருடைய குடும்பத்தினரிடம் இருந்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்றும் சொல்லப்படுகிறது. ஆனால் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை .
ஏற்கனவே வந்த சர்ச்சைகளுக்கு கீர்த்தி சுரேஷின் அம்மாவிடம் இருந்து தெளிவான ஒரு அறிக்கை வெளிவந்தது. கீர்த்தியின் திருமணம் உண்மை இல்லை என்பதை போல அந்த அறிக்கையில் கீர்த்தி சுரேஷ் அம்மா கூறியிருந்தார். இப்போது மீண்டும் அதே மாதிரியான ஒரு பிரச்சனை எழும்பி இருக்கிறது .ஆனால் இதுவும் உண்மையாகுமா அல்லது வதந்தியாகவே போய்விடுமா என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.
suresh
இதையும் படிங்க: Bigg boss Tamil: கன்டென்ட் கிடைக்க விடாமல் செய்யும் விஜய்சேதுபதி… தொடரும் எதிர்ப்புகளை சமாளிப்பாரா?
இதற்கிடையில் கீர்த்தி சுரேஷ் பல படங்களில் பிசியாக நடித்துக் கொண்டு வருகிறார். தமிழ் தெலுங்கு கன்னடம் மலையாளம் போன்ற மொழிகளில் நடித்து வந்த கீர்த்தி சுரேஷ் பாலிவுட்டில் முதன்முதலாக அடி எடுத்து வைத்தார். தமிழில் ரிலீஸ் ஆகி மிகப்பெரிய பிளாக் லிஸ்ட் ஹிட்டான தெறி படத்தின் ரீமேக் ஹிந்தியில் உருவானது. அந்த படத்தில் கீர்த்தி சுரேஷ் நடித்திருந்தார். இதுதான் அவருடைய ஹிந்தியின் முதல் படமாகும். இப்படி அடுத்தடுத்த பட வாய்ப்புகளால் பிசியாக இருந்து வருகிறார் கீர்த்தி சுரேஷ்.
TVK Vijay:…
TVK Stampede:…
Vijay TVK:…
Karur: தமிழக…
Tvk Stampede:…