×

பிரபல தயாரிப்பாளரின் கீழ்த்தரமான செயல் -  நடிகை குஷ்பு விளக்கம்!

ஊடகங்கள் குறித்து தவறாக பேசியதாக வெளியான ஆடியோவிற்கு  நடிகை குஷ்பு விளக்கமளித்துள்ளார்.

 

நடிகை குஷ்பூ பேசியதாக கூறி முடிவுறாத ஆடியோ ஒன்று சமூகவலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது. அதில் அவர் ஊடகங்கள் பற்றி சில சர்ச்சையான விஷயங்களை பேசியுள்ளதாக சொல்லப்படுகிறது. அந்த ஆடியோ பற்றி குஷ்புவே விளக்கம் அளித்துள்ளார்.

அதாவது , " நான் பேசியதாக கூறப்படும் அந்த  ஆடியோ எடிட் செய்யப்பட்டது. அது தயாரிப்பாளர் குரூப்பில் இருந்து பகிரப்பட்டுள்ளது. இப்படிப்பட்ட கீழ்த்தரமான புத்தி உள்ளவர்களை நினைத்து அவமானமாக இருக்கிறது. எனது 34 வருட சினிமா வாழ்க்கையில் என்றுமே நான் ஊடகங்களை தரக்குறைவாக பேசியது கிடையாது.    

பாதி மட்டுமே வெளியாகியுள்ள அந்த வாய்ஸ் மெஸேஜால் யாராவது பாதிக்கப்பட்டு இருந்து மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன். துரதிர்ஷ்டவசமாக நீங்கள் யாருக்காக உழைக்கிறார்களோ அவர்களே தான் உங்களை முதுகில் குத்த தயாராக இருக்கிறார்கள். எந்த தயாரிப்பாளர் இதை செய்தார் என்று எனக்கு தெரியும். ஆனால் நான் அவரின் பெயரை வெளியே சொல்லப்போவதில்லை. எனது மன்னிப்பே அவருக்கு மிகப்பெரிய தண்டனை. எனக்கூறி விளக்கமளித்துள்ளார்.

From around the web

Trending Videos

Tamilnadu News