×

காதலை கண்டித்த அண்ணன் - கூலிப்படை மூலம் போட்டுத்தள்ளிய நடிகை

 
காதலை கண்டித்த அண்ணன் - கூலிப்படை மூலம் போட்டுத்தள்ளிய நடிகை

கர்நாடக மாநிலம் தார்வார் மாவட்டம் உப்பள்ளி அருகே ஒரு ஆணின் உடல் முண்டமாக கிடந்தது. எனவே, போலீசார் அதைப்பற்றி விசாரணை நடத்தினர். யாரோ சிலர் ஒருவரை கொலை செய்து உடல் பாகங்களை பல இடங்களில் வீசி விட்டு சென்றது தெரியவந்தது. அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை சோதித்த போது பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்துள்ளது.

கொலை செய்யப்பட்ட நபர் மிஸ் கர்நாடகா அழகியாக தேர்ந்தெடுக்கப்பட்டவரும், நடிகையுமான ஷான்யா காடவேயின் அண்ணன் ராகேஷ் என்பது தெரியவந்தது. மும்பையில் தங்கி சினிமாவில் நடித்து வரும் ஷான்யா பல வருடங்களாக தனது மேலாளர் நியாஜ் என்பவரை காதலித்து வந்துள்ளார். இது ராகேஷுகு பிடிக்கவில்லை. எனவே, தங்கையை கண்டித்துள்ளார்.

எனவே, அவரை கொலை செய்ய திட்டமிட்ட ஷான்யா, தனத்  காதலர் நியாஜ் மூலம் கூலிப்படையை அமைத்துள்ளார். அதன்படி, 6 பேர் கொண்ட கூலிப்படையினர் ராகேஷை காரில் கடத்தி சென்று கொலை செய்துள்ளனர். அதன்பின் அவரின் கை, கால்கள், தலை என உடல் பாகங்களை துண்டாக வெட்டி பல்வேறு இடங்களில் வீசிவிட்டு காரில் தப்பி சென்றுள்ளனர்.

கார் எண்ணை வைத்து அந்த கூலிப்படையினரை கைது செய்த போலீசார், நடிகை ஷான்யா மற்றும் அவரின் காதலர் நியாஜ் அகமதுவையும் கைது செய்துள்ளனர்.

From around the web

Trending Videos

Tamilnadu News