Categories: latest news throwback stories

அந்த விஷயத்தை நான் செய்யவே இல்ல… காசு கொடுங்க அதை அனுப்புறேன்… துணிச்சலாக சொன்ன கிரண்

நடிகை கிரண் ஜெமினியில் நடிக்கும்போது ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக இருந்தார். தொடர்ந்து அன்பே சிவம், வில்லன், தென்னவன் படங்கள்ல நடிச்ச கிரண் கவர்ச்சியில் ரசிகர்களைக் கிறங்கடித்தார்.

இதனால் ரசிகர்கள் மத்தியில் அப்போது றெக்கைக் கட்டி பறந்தார். அதன்பிறகு சின்ன சின்ன வேடங்கள் தான் கிடைத்தது. தொடர்ந்து அந்த வாய்ப்புகளும் இல்லாமல் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அவர் ஆன்லைன் விபசாரம் செய்கிறார் என்றதும் கொதித்து எழுந்தாராம். என்ன சொல்றாருன்னு பார்க்கலாமா…

என்னை வந்து தொடர்ந்து மீடியாக்களில் நான் ஆன்லைன் விபசாரம் செய்கிறேன்னு சொன்னாங்க. எனக்கு ரொம்ப மனக்கசப்பா ஆகிடுச்சு. நான் செய்வது என்னோட கவர்ச்சியான புகைப்படம், வீடியோ வேணும்னா எனக்கு பணம் அனுப்பி டவுன்லோடு பண்ணிக்கோங்கன்னு சொன்னார்.

அது வந்து ஆபாசம் கிடையாது. அது கிளாமர். அதுக்குக் காரணம் இதுதான். ஒரு காலத்துல நான் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம்னு பயங்கர பிசியா இருந்தேன். வாய்ப்பே இல்ல. நான் என்ன பண்ணுவேன்.

kiran

சின்ன சின்ன ரோல் கூட கேட்குறேன். யாருமே கொடுக்க மாட்டேங்குறாங்க. அப்புறம் கொரோனா காலகட்டத்தில் பட வாய்ப்பு இல்லாமல் நடிகை கிரண் ரொம்ப கஷ்டப்பட்டேன். கையில பத்து காசு இல்ல. எனக்குன்னு இருக்குற நண்பர்கள் குழுவிடம் கடனாகக் கேட்கிறேன். அதுக்கு ‘நாங்க கடனா கொடுக்குறோம். நீ என்ன கொடுப்பே?’ நான் ‘காசைத் திருப்பித் தரேன்’னு சொன்னேன்.

‘இல்ல நாங்க வேற ஒண்ணை எதிர்பார்க்குறோம்’னாங்க. அப்போ தான் யாரும் உண்மையானவங்க கிடையாது. நான் ரொம்ப மதிக்கக்கூடியவங்களே இப்படி நடந்துக்கிட்டாங்க. நான் எல்லாருடனும் படுக்கையை பகிரணும்னு அவசியமில்ல. அந்தக் காசுக்காக என் மனசும் ஒத்துக்காது. அதனால தான் என்னோட ரசிகர்களுடன் எனது போட்டோக்களைப் பகிர்ந்து கொண்டு சம்பாதித்தேன்.

Also read: அரண்மனை4ஐ தொடர்ந்து காஞ்சனா4… ஹீரோயின் யாரு தெரியுமா? சுவாரஸ்ய அப்டேட்

இதுல என்ன தப்பு இருக்கு. அவங்க கேட்டாங்க. காசைக் கொடுங்க அனுப்புறேன்னு சொன்னேன். நல்ல நிலையில் இருக்கும்போது அதை நிலபுலன்களாக வாங்கி வச்சிக்கோங்க. அது என்னைக்காவது பயன்படும் என்கிறார். மேற்கண்ட தகவலை பிரபல மூத்த பத்திரிகையாளர் செய்யாறு பாலு தெரிவித்துள்ளார்.

sankaran v
பி.ஏ பட்டதாரியான இவர் ஊடகத் துறையில் 13 ஆண்டுகளாக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, ஆன்மிகம்,லைப் ஸ்டைல் கட்டுரைகளை வழங்கி வந்தார். கடந்த 4 ஆண்டுகளாக சினி ரிப்போர்டஸ் தளத்தில் உதவி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
Published by
sankaran v