நடிகை குஷ்பு மகளுக்கு திருமணம்... தடபுடலாக நடக்கும் ஏற்பாடுகள்!
நடிகை குஷ்பு:
தமிழ் சினிமாவில் 80ஸ் காலத்தில் பிரபலமான ஹீரோயினாக வலம் வந்து கொண்டிருந்தவர் நடிகை குஷ்பூ. கொழுக் மொழுக் தோற்றத்தில் இட்லி நடிகை என அழைக்கப்பட்டு வந்த இவர் ரஜினி, கமல், பிரபு என நட்சத்திர ஹீரோகளுடன் ஜோடி போட்டு நடித்து பிரபலமான நடிகையாக வளர்ந்து கொண்டிருந்தார் .

இவர் இயக்குனர் சுந்தர்சியை காதலித்து திருமணம் செய்து கொண்டு அவந்திகா அனந்திதா என இரண்டு பெண் குழந்தைகளை பெற்றார். தொடர்ந்து சினிமாவில் கவனம் செலுத்தி வருவதோடு அரசியலிலும் ஈடுபட்டு வந்தார்.
இந்த நிலையில் தற்போது நடிகை குஷ்புவின் மூத்த மகளான அவந்திகாவுக்கு திருமணம் ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறதாம். ஷ்ரவன் ஸ்ரீனிவாசன் என்பவருக்கும் அவந்திகாவுக்கும் திருமணம் நடைபெற இருக்கிறது .
பிரதர் மோடிக்கு அழைப்பு:

இந்த திருமண அழைப்பிதழயை நடிகை குஷ்பு பிரதமர் மோடி அவர்களை நேரில் சென்று குடும்பத்தோடு சந்தித்து அழைப்பிதழ் வைத்து வாழ்த்து பெற்று வந்திருக்கிறார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரல் ஆகி வருகிறது.
ஆனால் திருமணம் தேதி, திருமணம் எங்கு நடைபெறப்போகிறது. அவரது வருங்கால மருமகன் ஷ்ரவன் பற்றி இதுவரை எந்த ஒரு தகவலும் வெளியாகவில்லை. கூடிய விரைவில் இது குறித்து அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகலாம் என கூறப்படுகிறது . விஷயத்தை அறிந்த திரைப்படங்கள் பலரும் நடிகை குஷ்புவின் குடும்பத்திற்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
