Connect with us
kushboo

Cinema News

பெத்த அப்பா தட்டி கேட்டாரா? வரலட்சுமி குறித்த கேள்விக்கு குஷ்பூ காரசாரமான பதில்

Kushboo: சினிமாத்துறையில் நடக்கும் பாலியல் தொடர்பான பிரச்சினைகளை பற்றி பல நடிகைகள் அவ்வப்போது பேட்டி கொடுத்து வருகின்றனர். அதிலும் குறிப்பாக ராதிகா ஒட்டுமொத்த யூடியூப்பர்ஸ்களை வெளுத்து வாங்கிக் கொண்டு வருகிறார். அப்படி செய்கிறவர்களை செருப்பை கழட்டி அடிங்கனு விஷால் சொன்னதுக்கு யூடியூப்பர்ஸ்தான் அப்படி பேசுறாங்க. அவங்களை செருப்பால அடிக்க முடியுமா விஷால்? என கேட்டிருக்கிறார் விஷால்.

ராதிகாவின் டார்கெட் இந்த பிரச்சினை இல்லை. விஷால்தான் என பல பத்திரிக்கையாளர்கள் கூறிவருகிறார்கள். இந்த நிலையில் இதை பற்றி குஷ்பூ அளித்த ஒரு பேட்டியும் வைரலாகி வருகின்றது. மலையாள சினிமாவில் வெடித்த இந்த பிரச்சினைக்கு முன்பாகவே தமிழிலும் சின்மயி இந்த பிரச்சினையை கொண்டு வந்தார்.

இதையும் படிங்க: பரபரப்பா போயிட்டு இருந்த கூலி ஷூட்டிங்கிற்கு சூனியம் வச்சிட்டானுங்களே.. பெரிய ஆளுதான்!

கவிஞர் வைரமுத்து மேல் பாலியல் புகார் ஒன்றை கொடுத்தார். ஆனால் அதை பற்றி எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதற்கு பதிலாக அவருக்கு வேலைவாய்ப்புதான் பறி போனது. டப்பிங் பேசவிடவில்லை. பாட முடியவில்லை என குஷ்பூவிடம் கேட்டதற்கு அதற்கு குஷ்பூ ‘அப்போ யார் மேல் புகார் கொடுக்கிறாங்களோ அவஙகளால்தான் வேலைவாய்ப்பு போனது என சொல்லவர்றீங்களா?’ என திருப்பி கேட்டார்.

ஆனால் பொன்னியின் செல்வன் படத்தில் தெலுங்கில் டப்பிங் பேசியிருக்கிறார். பாடியிருக்கிறார். தமிழில் மட்டும் அவருக்கு மறுக்கப்பட்டிருக்கிறது என கேட்டால் அதற்கு குஷ்பூ ‘இதை அந்தப் படத்தின் இசையமைப்பாளரிடம்தான் கேட்கவேண்டும்’ என பதில் அளித்திருக்கிறார். ஆனால் உண்மை என்னவென்றால் இந்த மாதிரி பிரச்சினையை எடுத்து வந்தால் அதற்கான விளைவை கண்டிப்பாக சந்திக்க வேண்டும் என்பதற்கு உதாரணம்தான் சின்மயி.

இதையும் படிங்க: ஷூட்டிங் நடக்காமல் தடுத்த கோலிவுட்!.. விஜயகாந்த் மகனுக்கே இந்த நிலையா?!..

அதே போல் வரலட்சுமியும் ஒரு பேட்டியில் ‘என்னையும் ஒரு முறை அப்ரோச் பண்ணாங்க’ என சொல்லியிருந்தார். எப்பேற்பட்ட நடிகரின் மகள். அவருக்கு இந்த மாதிரி கொடுமை நடந்திருக்கு. இதை பற்றி யாரும் நீங்கள் கேட்கவில்லையே என குஷ்பூவிடம் கேட்ட போது அதற்கு குஷ்பூ ‘முதலில் அவருடைய அப்பா தட்டிக் கேட்டாரா?’ என பதிலுக்கு ஒரு கேள்வியை கேட்கிறார்.

கடைசியில் குஷ்பூ சொல்லவந்தது என்னவெனில் எந்த பிரச்சினையானாலும் நடிகர் சங்கத்திடம் வந்து சொல்லுங்கள். அதுக்கு என கமிட்டி இருக்கிறது. அங்கு வந்து சொல்லுங்கள். சொன்னால்தானே தெரியும்? வரலட்சுமி வந்து சொன்னாங்களா? சொன்னால் கண்டிப்பாக நடவடிக்கை எடுப்போம் என கூறினார்.

இதையும் படிங்க: அவங்களாம் படிச்சு சிகரம் தொட்டாங்க! படுத்தவங்க? ராதிகாவை வெளுத்து வாங்கிய பிரபலம்

ஆனால் மலையாளத்தில் ஒட்டுமொத்த சங்கமே தப்பு செய்திருக்கிறதே அப்படி இருந்தால் என்ன பண்ணுவது என குஷ்பூவிடம் கேட்ட போது ‘ஒட்டுமொத்த சங்கம் எப்படி தப்பு பண்ணும்? யாராவது ஒருவர் இருந்தால் கூட நடவடிக்கை எடுப்பார்கள்’என கூறியிருக்கிறார்.

author avatar
Rohini Sub Editor
நான் ரோகிணி. இந்த இணையதளத்தில் கடந்த 4 ஆண்டுகளாக செய்தி பிரிவில் சப் எடிட்டராக பணியாற்றுகிறேன். சினிமா தொடர்பாக அனைத்து செய்திகள் குறிப்பாக விமர்சனம், பழைய சினிமா தகவல்களை தருவதில் அதிக விருப்பம் உடையவர்.
Continue Reading

More in Cinema News

To Top