80 காலத்து ஹிட் நடிகையான குஷ்பு ஆரம்பத்தில் குழந்தை நட்சத்திரமாக தன் திரைப்பட வாழ்க்கையைத் தொடங்கினார். பின்னர் வருஷம் 16 தமிழ்த் திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார்.முதல் படமே ஹிட் அடித்ததால் அடுத்தடுத்து வாய்ப்புகள் மளமளவென குவிய துவங்கியது.
ஆனால் இவரை சினிமாவில் அறிமுகம் செய்து வைத்தது கனடா சினிமா மூலம் நடிகர் அர்ஜூன். இவரின் அழகையும் நடிப்பையும் பார்த்து ரசிகர்கள் குவிந்தனர். நடித்த பெரும்பாலான படங்கள் நடிகர் பிரபு கூடவே இருந்ததால் குஷ்புவையும் பிரபுவையும் ஒரு ஜோடியாகவே மக்கள் கருதினர்.
பார்க்க மென்மையாக அமைதியாக புன் சிரிப்புடன் இருக்கும் நடிகை குஷ்பு ஒரு சரியான ரௌடி என்று அவரது நெருங்கிய தோழியும் டான்ஸ் மாஸ்டருமான பிருந்தா அண்மையில் ஒரு பேட்டியில் கூறினார். என்ன என்று அவரிடம் கேட்டதில் “ ரோட்டில் யார் சண்டை போட்டாலும் உடனே போய் இவரும் சேர்ந்து என்ன என்று கேட்பாராம். மிரட்டுவாராம்.”
மேலும் அவர் கூறுகையில் “ ஒரு தடவை இவர்கள் கோவைக்கு சென்றிருந்த சமயத்தில் ரோட்டில் யாரோ ஒருவர் இவர் தோளில் கை போட்டாராம். கொஞ்சம் கூட யோசிக்காமல் ரோட்டில் தரதரவென இழுத்துக் கொண்டே சென்று அடி பின்னி விட்டாராம் குஷ்பு” பார்க்கத்தான் குஷ்பு அப்படி ஆனால் சரியான ரௌடி என்று பிருந்தா கூறினார்.
ரஜினி கமல்…
Rajasaab: ஏற்கனவே…
Kantara Chapter…
str 49…
நடிகர் தனுஷ்…