Connect with us
kushboo

Cinema News

என்னோட செருப்பு சைஸ் 41!… எப்படி இங்க வச்சே அடிக்கவா?!… வேற லெவல் சம்பவம் செய்த குஷ்பு!..

தமிழ் சினிமாவில் பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து மிகப் பிரபலமான நடிகையாக வளம் வந்தவர் நடிகை குஷ்பூ. தமிழ் சினிமாவில் 90ஸ் காலகட்டத்தில் மிகப் பிரபலமாக இருந்த ரஜினி, கமல், விஜயகாந்த், சத்யராஜ் என அனைத்து முன்னணி நடிகர்களுடனும் ஜோடி போட்டு நடித்து இருக்கின்றார். பின்னர் வாய்ப்பு குறையவே இயக்குனர் சுந்தர் சி-யை திருமணம் செய்து கொண்டு குடும்பம், குழந்தைகள் என்று செட்டில் ஆகிவிட்டார்.

இதையும் படிங்க: மயில்சாமி ஒரு விஷயம் பண்ணார்!. ஆடிப் போயிட்டேன்!.. ஆர்.ஜே.பாலாஜி சொன்ன செம மேட்டர்!..

தற்போதும் சினிமாவில் அவ்வபோது தலைகாட்டி வரும் குஷ்பூ அரசியலிலும் ஈடுபட்டு வருகின்றார். பாரதிய ஜனதா கட்சியில் ஒரு முக்கிய பொறுப்பில் இருந்து வருகின்றார் நடிகை குஷ்பூ. தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி உள்ளிட மொழிகளில் 200 க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் இவர் நடித்திருக்கின்றார்.

தற்போது கோவாவில் 55 வது சர்வதேச திரைப்பட விழா தொடங்கி நடைபெற்று வருகின்றது. இதில் சினிமாவில் பெண்களுக்கான பாதுகாப்பு குறித்த கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஏராளமான பிரபலங்கள் கலந்து கொண்டன. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட குஷ்பூ சினிமாவில் பெண்கள் சந்திக்கும் பல சவால்கள் குறித்து மனம் திறந்து பேசி இருந்தார்,

மேலும் தனக்கு நடந்த ஒரு மோசமான அனுபவத்தையும் அவர் வெளிப்படையாக பேசினார். அந்த நிகழ்ச்சியில் அவர் தெரிவித்திருந்ததாவது ‘நான் சினிமாவில் ஆரம்ப காலகட்டத்தில் இருந்தபோது பலரும் தவறான அணுகு முறையில் பார்த்திருக்கிறார்கள். ஒரு படப்பிடிப்பின் போது ஹீரோ என்னிடம் யாருக்கும் தெரியாமல் எனக்கு ஒரு வாய்ப்பு தருவீர்களா? என்று கேட்டார்.

நான் யோசிக்காமல் என் செருப்பை உயர்த்தி என்னோட செருப்பு சைஸ் 41. இங்கேயே வச்சு அடிக்கவா இல்ல செட்டில் வைத்து அடிக்கவா என்று கேட்டேன். அதற்கு பிறகு என்னிடம் அவர் பேசவே இல்லை. அவருக்கு அந்த தைரியம் வரவில்லை. நான் அப்போது சினிமாவுக்கு புதுசு என்றாலும் எதைப் பற்றியும் கவலைப்படாமல் என்னுடைய சுயமரியாதை மட்டுமே எனக்கு முக்கியம் என்று யோசித்தேன்.

இதையும் படிங்க: Dhanush: தனுஷ் அராஜகத்தின் தலைவன்.. உன் குடும்பம் தரமான குடும்பமா? ஒரேடியா சாய்ச்சுப்புட்டாரே

நீங்களும் எப்போதும் உங்களை மதிக்க வேண்டும். திரைத்துறையில் மட்டுமல்ல அனைத்து இடங்களிலும் மரியாதை என்பது மிக முக்கியம். தங்களுடைய மரியாதையை விட்டுக் கொடுக்காமல் யாருக்கும் அடிபணியாமல் எதிர்த்து கேள்வி கேட்க வேண்டும். அதுதான் அவர்களின் சுதந்திரம்’ என்று பேசி இருந்தார் . நடிகை குஷ்புவின் இந்த கருத்து அனைவரிடத்திலும் வரவேற்பை பெற்றுள்ளது. மேலும் சமூக வலைதள பக்கங்களில் வைரலாகி வருகின்றது.

author avatar
ramya suresh
Continue Reading

More in Cinema News

To Top