வித்தியாசமான லுக்கில் லட்சுமி மேனன்.. இதுவும் நல்லாத்தான் இருக்கு!..

எஸ்.ஆர்.பிரபாகரன் இயக்கத்தில் சுந்தரபாண்டியன் படத்தின் மூலமாக சினிமாவில் அறிமுகம் ஆன லட்சுமி மேனன் அதன் பிறகு கும்கி, ஜிகர்தண்டா, வேதாளம் என அதிகம் பேசப்பட்ட படங்களில் நடித்து பிரபலமானார். கேரளத்து வரவான நடிகை லட்சுமி மேனனுக்கு தமிழில் ஏகப்பட்ட ரசிகர்கள் உருவாகினர். அதோடு, நடிகர் விஷாலுடன் அவருக்கு காதல் எனவும் கிசுகிசுக்கள் பரவியது.
அதன்பின், சில வருடங்கள் தமிழ் படங்களில் நடிப்பதில் ஒதுங்கியிருந்த அவர் பின்னர் மாடர்ன் ரோல்களை ஏற்று நடித்திருந்தார். அது அவரது முகபாவனைக்கு செட் ஆகவில்லை. அத்துடன் படவாய்ப்புகளும் குறைய துவங்கியது. மேலும், உடல் எடையும் கூறி மிகவும் அசிங்கமாக மாறினார்.
தற்போது உடல் எடையை குறைத்து மீண்டும் பழைய அழகுக்கு திரும்பியுள்ளார். முத்தையா இயக்கத்தில் விக்ரம் பிரவுக்கு ஜோடியாக ‘புலிக்குத்தி பாண்டி’ படத்தில் நடித்தார்.
இந்நிலையில், கண்ணாடி மற்றும் கவுன் அணிந்து எடுக்கப்பட்ட புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.