கவர்ச்சிக்கு நோ சொன்னதால் பறிபோன வாய்ப்புகள்... புலம்பும் நடிகை
வாரிசு நடிகருடன் நடித்து பிரபலமான நடிகை கவர்ச்சிக்கு ஸ்டிரிக்டாக நோ சொன்னதால் வந்த வாய்ப்புகளை இழந்துவிட்டாராம்.
Sun, 28 Mar 2021

வெளிமாநில இறக்குமதியான அந்த நடிகை முதல் படத்திலேயே வாரிசு நடிகருடன் நடித்து பட்டையைக் கிளப்பினார். படமும் ஹிட்டானது. இதனால், அடுத்தடுத்த வாய்ப்புகள் வரும் என்று எதிர்பார்த்துக் காத்திருந்தாராம். நடிக்க நல்ல ஸ்கோப் இருக்கும் படங்கள்தான் என் சாய்ஸ் என கண்டிஷன் போட்டாராம்.
ஒரு படத்துல நடிச்சதுக்கே இப்படியா என்று பேச்சு எழுந்தது. அதுபோல், வந்த சில வாய்ப்புகளையும் கவர்ச்சியாக நடிக்க வேண்டும் என்று சொன்னதால், நோ சொல்லி திருப்பி அனுப்பிவிட்டாராம். கவர்ச்சிக்கு நடிகை தடை போட்ட விஷயம் கோடம்பாக்கத்தில் பரவவே, நடிகைக்கு வாய்ப்பு எதுவும் வரவில்லையாம்.
ஏற்கனவே கைவசம் இருந்த வாய்ப்பும் இதனால் பறிபோய்விட்டதாம். கவர்ச்சி பாடாய்படுத்துதே என தெரிந்தவர்களிடம் எல்லாம் புலம்பத் தொடங்கிவிட்டாராம் நடிகை. அவருக்கு கைவசம் ஒரே ஒரு படம்தான் இருக்கிறதாம்.