Categories: Cinema News latest news throwback stories

உச்சத்தில் வர வேண்டிய நடிகை… விபச்சார வழக்கால் தொலைந்த வாழ்க்கை…

Actress: தமிழ் சினிமாவில் சில நடிகைகள் சிலர் வளர வேண்டிய நேரத்தில் தப்பான பாதையை தேர்ந்தெடுத்து தங்கள் மொத்த கேரியரை காலி செய்து கொண்ட நிகழ்வுகள் அதிகம். அப்படி ஒரு நடிகை குறித்த அதிர்ச்சி தகவல் வெளியாகி இருக்கிறது.

மதுரையை சேர்ந்தவர் நடிகை மாதுரி. அவர் பள்ளியில் படித்துக் கொண்டிருக்கும் சமயத்திலே பாவம் கொடூரன் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிக்க வந்தார். தமிழ் மற்றும் மலையாளம் என இரு மொழிகளில் வெளியான இக்கதையில் மாதுரியின் கவர்ச்சிக்கே படம் தாறுமாறு ஹிட்டடித்தது.

இதையும் படிங்க: சொன்னீங்களே செஞ்சீங்களா… விஜயகாந்த் விஷயத்தால் கடுப்பில் இருக்கும் ரசிகர்கள்!…

இதையடுத்து, விஜயகாந்தின் ’அலை ஓசை’ திரைப்படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்தார். படம் பெரிய அளவில் ஹிட்டடிக்கவில்லை. இதனால் மாதுரிக்கு மலையாள பட வாய்ப்பே கிடைத்தது. அதிலும் கிளாமர் காட்சிகளிலே நடித்தார். தொடர்ந்து, சில மலையாள படங்களில் கிளாமராக நடித்துக் கொண்டிருந்தார். அச்சமயத்தில் தான் அவருக்கு தமிழில் ’சம்சாரம் அது மின்சாரம்’ படத்தில் கேரக்டர் ரோல் கிடைத்தது.

அதில் சந்திரசேகருக்கு ஜோடியாக நடித்தார். அதில் சில கிளாமர் காட்சிகள் இருந்தது. அப்படம் ஹிட்டடிக்க தமிழில் நிறைய வாய்ப்புகள் குவிந்தது. பாலைவன ரோஜாக்கள், மனிதன், மேகம் கருத்திருக்கு, ஒரே ரத்தம், மைக்கேல் ராஜ், காவலன்,அவன் கோவலன், பரிசம் போட்டாச்ச, பெண்மணி அவள் கண்மணி,  குற்றவாளி, சகாதேவன் மகாதேவன் உள்ளிட்ட படங்களில் நடித்தார்.

இதையும் படிங்க: மீண்டும் வந்த மனோஜ் காதலி… ரோகிணி நினைக்கிறதெல்லாம் நடக்குதே… நல்லாவா இருக்கு!

கிடுகிடுவென தமிழ் சினிமாவின் உச்ச நடிகையானார். ஆனால் திடீரென அவருக்கு வாய்ப்புகள் மறுக்கப்பட்டது. சிலரோ நடிப்பில் இருந்தே மாதுரி விலகியதாக கூறப்பட்டது. இதை தொடர்ந்தே மாதுரி சில நடிகைகளை வைத்து விபச்சாரம் செய்ததாகவும் அதனால் தான் அவர் வாய்ப்புகள் மறுக்கப்பட்டதாகவும் கோலிவுட் வட்டாரத்தில் கூறப்படுகிறது.

Published by
Shamily