Categories: Cinema News latest news

அந்த கெழட்டுப் பைய கூடலாம் முடியாது! மஞ்சுவாரியர் நோ சொன்னதுக்கான காரணம்

Manju Warrior: மலையாள சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டாராக இருப்பவர் நடிகை மஞ்சு வாரியர். இங்கு நயன்தாராவை எப்படி கொண்டாடி வருகிறோமோ அதைப்போல கேரளாவில் மஞ்சு வாரியரை தலையில் தூக்கி வைத்து கொண்டாடி வருகிறார்கள் ரசிகர்கள்.

தமிழில் அசுரன் என்ற திரைப்படத்தின் மூலம் முதன்முதலில் அறிமுகமான மஞ்சு வாரியர் அடுத்ததாக விடுதலை படத்தின் இரண்டாம் பாகம், வேட்டையன் போன்ற படங்களில் நடித்திருக்கிறார். அந்த இரு திரைப்படங்களும் அடுத்தடுத்து ரிலீஸுக்காக காத்துக் கொண்டிருக்கின்றன.

இதையும் படிங்க: எஸ்.பி.பி எட்டு மணி நேரம் கஷ்டப்பட்டு பாடிய ரஜினி பாட்டு!… அட அந்த படமா?!…

இப்போது மலையாளத்தில் பாலியல் ரீதியாக பல சர்ச்சைகள் எழுந்த வண்ணம் இருக்கின்றன. இதில் யாரும் எதிர்பாராத பெரிய பெரிய நடிகர்கள் அடுத்தடுத்து சிக்கிக்கொண்டு தவிக்கின்றனர். அந்த வகையில் மோகன்லால் மம்முட்டி இவர்களின் பெயரும் அடிபட்டு இருக்கிறது. ஆனால் இருவரும் இவ்வளவு நாள் அமைதியாக இருந்து நேற்று தான் வாயை திறந்து இருக்கின்றனர்.

நாங்கள் நல்ல முறையில் ஒத்துழைப்பு கொடுப்போம். குற்றம் செய்தவர்கள் தண்டிக்கப்படுவார்கள் என இருவரும் ஒரே மாதிரியான அறிக்கையை வெளியிட்டு இருக்கிறார்கள். இந்த நிலையில் பிரபல மூத்த பத்திரிக்கையாளர் பரமேஸ்வரன் மம்முட்டியை பற்றி ஒரு தகவலை பகிர்ந்திருக்கிறார்.

இதையும் படிங்க: தளபதி படத்தை கலாய்க்க போய் வாங்கி கட்டிக்கொள்ளும் கார்த்தி… தேவையா இதெல்லாம்?

20 வருடங்களுக்கு முன்பு மம்முட்டி மற்றும் மஞ்சு வாரியார் இருவரும் ஒரு படத்தில் இணைந்து நடித்தார்களாம். அப்போது மம்முட்டி மாலை நேரத்தில் மஞ்சுவாரியரை தன்னுடைய அறைக்கு அழைத்ததாக பத்திரிகையாளர் பரமேஸ்வரன் கூறியிருக்கிறார்.

உடனே உதவியாளர் மஞ்சு வாரியரிடம் வந்து மம்முட்டி உங்களை வரச் சொன்னார் எனக் கூற அதற்கு மஞ்சு வாரியர் அந்த கெழட்டுப் பைய கூப்பிடுவதற்கு எல்லாம் வர முடியாது என சொல்லி திருப்பி அனுப்பி விட்டாராம்.

இதையும் படிங்க: எங்க அப்பா காலத்துல இருந்தே நடக்குது.. பேர கேட்டா பயந்துருவீங்க! உண்மைய உடைத்த ராதிகா

அதன் பிறகு மஞ்சுவாரியாருக்கு வந்த விளைவு என்னவென்றால் அதிலிருந்து அந்தப் படத்தில் நடிக்க வைக்காமல் சும்மாவே உட்கார வைக்க சொல்லி இருக்கிறார் மம்முட்டி. இந்த மாதிரி ஏகப்பட்ட நடிகர்கள் இனிமேல் அடுத்தடுத்து சிக்குவார்கள் என மூத்த பத்திரிக்கையாளர் பரமேஸ்வரன் கூறியிருக்கிறார்.

Rohini Sub Editor
நான் ரோகிணி. இந்த இணையதளத்தில் கடந்த 4 ஆண்டுகளாக செய்தி பிரிவில் சப் எடிட்டராக பணியாற்றுகிறேன். சினிமா தொடர்பாக அனைத்து செய்திகள் குறிப்பாக விமர்சனம், பழைய சினிமா தகவல்களை தருவதில் அதிக விருப்பம் உடையவர்.
Published by
Rohini