என் முதல் காதல்.... ரொம்ப நாள் கழித்து - மனம் திறந்த நடிகை மீனா!
நடிகை மீனா:
தென்னிந்திய சினிமாவில் பிரபலமான நடிகையாக இருந்து வரும் நடிகை மீனா குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகமாகி அதன் பிறகு ஹீரோயின் ஆக இந்தி, தமிழ், மலையாளம் ,தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட பலமொழிகளில் நடித்து பிரபலமான நடிகையாக இருந்து வருகிறார் .
இந்த நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசிய நடிகை மீனாவிடம் உங்களது முதல் காதல் குறித்து கூறுங்கள் என கேட்டதற்கு...... கொஞ்சமும் யோசிக்காமல் சட்டென என்னுடைய முதல் காதல் எது யார் என்பது எனக்கு ரொம்ப நாள் கழிச்சு தான் தெரியும்.

மீனாவின் முதல் காதல்:
ஆமாம், என்னுடைய முதல் காதல் என்னோட ப்ரொபஷன் தான். என்னுடைய சினிமா தொழில் தான் என நடிகை மீனா கூறிவிட்டார். எப்படி ஒருவரை பார்த்து பழகி பேசி வாழ்க்கை நடத்த ஆசைப்படுகிறோமோ அதே மாதிரி தான் என்னுடைய தொழில் என்னவென்று புரிந்து அதன் பிறகு அதிலே நான் பயணித்து அதை நான் காதலித்து தொடர்ந்து என்னுடைய வேலையை செய்து வந்தேன் என நடிகை மீனா தெரிவித்தார்.
மீனாவின் இந்த பேட்டி தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. அவர் இந்த அளவுக்கு காதலித்து அவரது வேலையை செய்யவே தான் அவரது கேரக்டர்கள் என்றும் நிலைத்து பேசக் கூடியதாக இருக்கிறது என ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.
