குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பின் முன்னனி நடிகையாக உயர்ந்தவர் நடிகை மீனா. ரஜினி அங்கிள் என்ற வசனத்தின் மூலம் அனைவரையும் சிறுவயதிலயே தன் பக்கம் கவனத்தை ஈர்த்தவர். படிப்படியாக ஏகப்பட்ட படங்களில் நடித்து உச்சம் தொட்டவர் நடிகை மீனா. எல்லா மொழி படங்களிலும் நடித்து தென்னிந்திய நடிகைகளின் முன்னனி நடிகையாக வலம் வந்தவர்.
ரஜினி, கமல், அஜித், விஜயகாந்த், சரத்குமார் உட்பட அனைத்து முன்னனி நடிகர்களுடம் ஜோடி சேர்ந்து ஆட்டம் போட்டவர். தன் கண்களால் அனைவரையும் வசியம் செய்தவர். தில்லான தில்லான என்ற பாடல் மூலம் அனைவரையும் ஆடச் செய்தவர். இந்த பாடல் பட்டித்தொட்டி எல்லாம் பரவி நல்ல வரவேற்பை பெற்றது.
அனைத்து முன்னனி நடிகர்களுடம் சேர்ந்து நடித்த மீனா விஜய் கூட மட்டும் சேர்ந்து ஒரு படம் கூட நடிக்க வில்லை. ஆனால் ஷாஜகான் படத்தில் விஜய் கூட சேர்ந்து ‘சரக்கு வைச்சுருக்கேன்’ என்ற பாடலுக்கு மட்டும் நடனம் ஆடியிருப்பார். அதற்காக காரணத்தை அறிய ஒரு பேட்டியில் அவரை சந்தித்த பொழுது விஜய் கூட 3, 4 படம் நடிக்க வேண்டியது.
ஆனால் தேதி பிரச்சினையில் தான் அனைத்து படங்களும் மிஸ் ஆனது. மேலும் ஃபிரண்ட்ஸ் படத்தில் கூட நான் தான் நடிக்க வேண்டியது. ஃபிரண்ட்ஸ் படத்தின் ஒரிஜினல் மலையாள படத்தில் நான் தான் நடித்திருந்தேன்.ஆனால் தேதி பிரச்சினையால் தமிழில் என்னால் நடிக்க முடியவில்லை என வருத்தத்தோடு மீனா கூறினார்.
TVK Vijay:…
TVK Stampede:…
Vijay TVK:…
Karur: தமிழக…
Tvk Stampede:…