Connect with us
meena

Cinema News

இனிமே என் பொண்ணு இப்படி நடிக்கவே மாட்டா!.. படப்பிடிப்பில் கதறி அழுத மீனா அம்மா!..

சிறுமியாக இருக்கும்போதிலிருந்தே திரைப்படங்களில் நடித்து வருபவர் நடிகை மீனா. ரஜினி நடித்த அன்புள்ள ரஜினிகாந்த் படத்தில் சிறுமியாக நடித்தார். அதேபோல் எங்கேயோ கேட்ட குரல் படத்தில் ரஜினியின் மகளாக நடித்திருந்தார். தெலுங்கு படங்களிலும் சிறுமியாக நடித்துள்ளார்.

meena

மெல்ல மெல்ல தமிழ் படங்களில் கதாநாயகியாக நடிக்க துவங்கினார். எஜமான் படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடித்ததும் அவரின் மார்க்கெட் எகிறியது. அதன்பின் விஜயகாந்த், சத்தியராஜ், சரத்குமார், பிரபு, கார்த்திக் என பலருடனும் நடித்து 90களில் முன்னணி நடிகையாக இருந்தார். தற்போது குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார்.

ராஜ்கிரண் ஹீரோவாக அறிமுகமான முதல் திரைப்படம் என் ராசாவின் மனசிலே. இந்த படத்தை தனுஷின் அப்பா கஸ்தூரி ராஜா இயக்கியிருந்தார். இளையராஜா இசையில் வெளியான இப்படம் பெரிய ஹிட் அடித்தது. இந்த படத்தில் ராஜ்கிரணின் மனைவியாக மீனா நடித்திருப்பார். இந்த படத்தில் இவர் இறந்துவிடுவார். அவரது உடலை தகனம் செய்யும் அந்த காட்சியை மிகவும் யாதார்த்தமாக உண்மை சம்பவம் போலவே கஸ்தூரி ராஜா படமாக்கியிருப்பார். இந்த காட்சியை தியேட்டரில் பார்த்த தாய்மார்கள் கதறி அழுதனர்.

meena

இந்த காட்சி படமாக்கப்பட்டபோது படப்பிடிப்பில் இருந்த மீனாவின் அம்மா கதறி அழுதாராம். ‘என்னய்யா என் பொண்ண வச்சி இப்படியெல்லாம் எடுக்குறீங்க.. நான் ஒத்துக்க மாட்டேன்’ என படக்குழுவிடம் தகராறும் செய்துள்ளார். எனவே, அவரை ஒரு இடத்தில் தங்க வைத்து அவருக்கு தெரியாமல் அந்த காட்சியை படக்குழு எடுத்தார்களாம். அதன்பின் ‘என் பொண்ணு இனிமேல் இந்த மாதிரி காட்சியில் நடிக்கவே மாட்டா’ என இயக்குனர்களிடம் கறாராக சொல்லிவிட்டாராம்.

author avatar
சிவா
முதுகலை பட்டதாரியான இவர் 12 ஆண்டுகளாக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல்,வணிகம் மற்றும் சமூகம் சார்ந்த கட்டுரைகளை வழங்கி வருகிறார். தற்போது கடந்த 12 ஆண்டுகளாக சினி ரிப்போர்டஸ் தளத்தில் செய்தி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
Continue Reading

More in Cinema News

To Top