Categories: Cinema News latest news

அஜித்தை அனைவரின் முன்னும் அவமானப்படுத்திய பிரபல நடிகையின் தாய்… இதெல்லாம் நியாயமா??

தமிழ்நாட்டின் பெரும்பான்மையான ரசிகர்களை கைக்குள் போட்டு வைத்திருக்கும் நடிகரான அஜித்குமார், சினிமாவில் நடிக்க வந்த புதிதில் பல அவமானங்களை கடந்து தமிழ் சினிமாவின் தவிர்க்கமுடியாத நடிகராக உருவானார். தொடக்க காலத்தில் மட்டுமல்லாது, தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வளர்ந்து வந்த காலகட்டத்திலும் கூட பல அவமானங்களை சந்தித்துள்ளார் அஜித்.

அவ்வாறு அஜித்குமாரை ஒரு சினிமா விழாவில் ஒரு முன்னணி நடிகையின் தாய் அவமானப்படுத்தியதாக ஒரு சம்பத்தை தனது பேட்டி ஒன்றில் பகிர்ந்துள்ளார் மூத்த பத்திரிக்கையாளரான செய்யாறு பாலு.

Ajith Kumar

1999 ஆம் ஆண்டு அஜித்குமார், கார்த்திக், மீனா ஆகியோரின் நடிப்பில் வெளியான திரைப்படம் “ஆனந்த பூங்காற்றே”. இத்திரைப்படத்தை ராஜ்கபூர் இயக்கியிருந்தார். காஜா மைதீன் இத்திரைப்படத்தை தயாரித்திருந்தார்.

இத்திரைப்படம் அந்த காலகட்டத்தில் மாபெரும் வெற்றித் திரைப்படமாக அமைந்தது. இத்திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து ஒரு விருது வழங்கும் விழாவில் அஜித்திற்கு சிறந்த நடிகருக்கான விருது வழங்கப்பட்டது. அந்த விருதை வழங்கியவர் நடிகை மீனா.

இதையும் படிங்க: நயன்தாராவை அந்த விஷயத்தில் ஓவர் டேக் செய்யும் வாரிசு கதாநாயகி?? இருந்தாலும் இது கொஞ்சம் ஓவர்தான்!!

Meena

அப்போது அந்த விருது வழங்கும் விழாவை தொகுத்து வழங்கிய தொகுப்பாளர், அஜித்தையும், மீனாவையும் கொஞ்சம் நடனமாடச் சொன்னாராம். அப்போது மீனாவின் அம்மா, “என் பொண்ணு ரஜினி, கமல் மாதிரியான பெரிய நடிகர்களுடன் நடித்தவள். அவளை எப்படி அஜித்துடன் டான்ஸ் ஆடச்சொல்லலாம்” என கூறி மீனாவை அழைத்து வந்துவிட்டாராம். இது போல் அஜித்தின் கேரியரில் பலரும் அவரை அவமானப்படுத்தியுள்ளார்களாம்.

Arun Prasad
Published by
Arun Prasad