மீனாவுக்கு வயசு தான் 40….. ஆனால் வாலிபம் கொஞ்சம் கூட குறையல!
மீனாவின் படங்கள்:
தெலுங்கு சினிமாவில் பிரபலமான நடிகையாக பார்க்கப்பட்டவர் தான் நடிகை மீனா. இவருக்கு தற்போது 49 வயதாகிறது. இவர் அண்ணாத்த, அவ்வை சண்முகி, அன்புடன் அன்புள்ள ரஜினிகாந்த், ஆனந்த பூங்காற்றே, கூலி, சிட்டிசன், செங்கோட்டை, தாய்மாமன், நம்ம வீட்டு கல்யாணம், நாடோடி மன்னன், நாம் இருவர் நமக்கு இருவர், பாரதி கண்ணம்மா, பொற்காலம், மரியாதை, மருமகன், மாமன் மகள், மாயி, முத்து உள்ளிட்ட பல்வேறு வெற்றி திரைப்படங்களில் நடித்து பிரபலமான நடிகையாக பார்க்கப்பட்டு வருகிறார்.
திரைப்படங்களில் ஹீரோயினாக நடிப்பதற்கு முன்னர் குழந்தை நட்சத்திரமாக அன்புள்ள ரஜினிகாந்த் உள்ள திரைப்படங்களில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. தொடர்ச்சியாக திரைப்படங்களில் சிறப்பு கதாபாத்திரங்களை ஏற்று வருகிறார் நடிகை மீனா.
கணவர் மரணம்
இதனிடையே அவரது கணவர் வித்யாசாக நுரையீரல் தொற்று காரணமாக கடந்த 2022 ஆம் ஆண்டு ஜூன் 28ஆம் தேதி காலமாகி விட்டார். தொடர்ந்து அவரது மகள் நைனிகா விஜய்யின் தெறி உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்திருந்தார் .
இந்த நிலையில் கணவரை இழந்த மீனா தனிமையில் தான் வாழ்ந்து வருகிறார். அவரைப் பற்றிய கிசுகிசுக்கள் அவ்வப்போது எழுந்து வருவது உண்டு. ஆனால் அவரோ அதை பற்றி எல்லாம் கவலைப்படுவதில்லை.
இளமை குறையாத மீனா:
இந்த நிலையில் தற்போது நடிகை மீனா தனது லேட்டஸ்ட் புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட அது அனைவரது கவனத்தையும் ஈர்த்திருக்கிறது. 49 வயதில் மீனா இவ்வளவு அழகாக இருக்கிறாரே… அவருக்கு வயசு தான் 49 ஆனால் இளமை இன்னும் அப்படியே தாங்க இருக்கு என ரசிகர்கள் அவரை ரசித்து கமெண்ட் செய்து வருகிறார்கள்.
