அரசியல்வாதியை மணக்கும் `பட்டாஸ்’ நடிகை... ரெடியாகும் பிரமாண்ட பங்ஷன்

தனுஷ் நடித்திருந்த பட்டாஸ் படத்தில் நடித்தவர் மெஹ்ரின் பிர்ஸாடா. பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த மெஹ்ரின், தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு உள்ளிட்ட மொழிகளிலும் நடித்து வந்தார். இவருக்கும் பஞ்சாப் காங்கிரஸ் கட்சி பிரமுகரான பவ்யா பீஷ்னோய் என்பவருக்கும் வரும் மார்ச் 12-ம் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற இருக்கிறது. ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள ஆலிலா கோட்டையில் இவர்களது திருமண நிச்சயதார்த்தம் மிகப்பிரமாண்டமாக நடக்க இருக்கிறது.
இந்தத் திருமணம் இருவீட்டாரும் பேசி முடிவு செய்திருக்கிறார்கள். இதனால், இரண்டு குடும்பத்தினரும் மிகவும் மகிழ்ச்சியடைந்திருப்பதாகக் கூறுகிறார்கள். தெலுங்கில் நானி நடித்து கடந்த 2016-ல் வெளியான கிருஷ்ண காடி வீரா பிரேம கதா படம் மூலம் அறிமுகமான மெஹ்ரின், எஃப் 3 படத்தின் ரிலீஸுக்காகக் காத்திருக்கிறார். திருமணத்துக்குப் பின் அவர் நடிப்பாரா இல்லையா என்பது குறித்து மெஹ்ரின் பிர்ஸாடாவின் தாய் பம்மி பிர்ஸாடா தெளிவான விளக்கம் எதையும் கொடுக்கவில்லை.