×

அடையாளமே தெரியாமல் மாறிப் போன ஈரமான ரோஜாவே புகழ் மோகினி

அடையாளமே தெரியாமல் மாறிப் போன ஈரமான ரோஜாவே புகழ் மோகினி
 

ஈரமான ரோஜாவே படம் மூலம் அறிமுகம் ஆனவர் நடிகை மோகினி. முதல் படமே சூப்பர் ஹிட் ஆனதை தொடர்ந்து பல படங்களில் நாயகியாக நடித்தார். குறிப்பாக விஜயகாந்த நடித்த தாய்மொழி, தாயகம், நான் பேச நினைப்பதெல்லாம்,புதிய மன்னர்கள் உள்ளிட்ட ஏராளமான படங்களில் நடித்துள்ளார். தமிழ் மட்டுமின்றி மலையாளம், தெலுங்கிலும் சில படங்களில் நடித்துள்ளார் மோகினி.

பின்னர் சினிமா வாய்ப்புகள் குறைய தொடங்கியதும் சன் தொலைகாட்சியில் சில தொடர்களில் நடித்தா5ர். பின்னர் திடீரென பாரத் என்பவரை கடந்த 1999ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டு அமெரிக்காவில் செட்டில் ஆனார். இவர்களுக்கு இரு மகன்கள் உள்ளனர்.

கடந்த சில வருடங்களாக மோகினி குறித்த எந்த செய்திகளும் இன்றி காணப்பட்டது. இந்த நிலையில் நடிகை மோகினியின் தற்போதைய புகைப்படங்கள் சில வெளியாகி வைரலாகி வருகிறது.இந்து மதத்தை சேர்ந்த இவர் கிருஸ்துவ மததிற்கு மாறி தற்போது மதபோதகராக இருந்து வருகிறார் மோகினி. அடையாளமே தெரியாமல் மாறியுள்ள மோகினியின் குடும்ப புகைப்படத்தை நீங்களே பாருங்களேன்... 

Actress Mohini

From around the web

Trending Videos

Tamilnadu News