×

திடிரென நடந்து முடிந்த நடிகையின் திருமணம்

கொரோனா கட்டுப்பாட்டு விதிமுறைகளைப் பின்பற்றி நடந்த இவர்கள் திருமணத்தில் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் கலந்துகொண்டனர்.

 
28e475c4-b362-4a10-b8f2-5340b8fab937

பிரபல நடிகை மிருதுளாவுக்கு இன்று திடீரென திருமணம் நடந்து முடிந்துள்ளது. தமிழில், நூறாம் நாள், ஜெனிபர் கருப்பையா, கடன் அன்பை முறிக்கும் போன்ற படங்களில் நாயகியாக நடித்துள்ளவர் மிருதுளா விஜய்.

இவர் மலையாளத்திலும் நிறைய படங்களில் நடித்துள்ளார். இதோடு தொலைக்காட்சி தொடர்கள் மற்றும் இசை ஆல்பங்களிலும் நடித்து இருக்கிறார்.

இவருக்கும் மலையாள சின்னத்திரை நடிகர் யுவகிருஷ்ணா என்பவருக்கும் கடந்த வருடம் திருமணம் நிச்சயமானது. இரண்டு பேரும் ஒரே துறையை சேர்ந்தவர்கள் என்றாலும், இது காதல் திருமணம் இல்லை என்று தெரிவித்திருந்தனர். இந்நிலையில் இவர்கள் திருமணம் திருவனந்தபுரத்தில் இன்று திடீரென நடந்து முடிந்துள்ளது.

கொரோனா கட்டுப்பாட்டு விதிமுறைகளைப் பின்பற்றி நடந்த இவர்கள் திருமணத்தில் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் கலந்துகொண்டனர்.

இதையடுத்து புதுமணத்தம்பதிகளின் புகைப்படங்கள் சமூகவலைதளத்தில் வெளியாகியுள்ளது, அதை பார்த்த ரசிகர்கள் தம்பதிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

From around the web

Trending Videos

Tamilnadu News