×

நடிகை நதியாவுக்கு இந்த நிலமையா?...ரசிகர்கள் பிரார்த்தனை....

 
nadhiya

நடிகை நதியா 80 மற்றும் 90 காலகட்டங்களில் தமிழ் மற்றும் மலையாள திரைப்படத்தின் பிரபலமான கதாநாயகியாக வலம் வந்தார். முன்னணி நடிகர்களுடன் நடித்து, சூப்பர்ஹிட் திரைப்படங்களை கொடுத்தார். அதன்பின் திருமணம் செய்து கொண்டு அமெரிக்காவில் செட்டில் ஆனார். தற்போது குடும்பத்துடன் மும்பையில் வசித்து வருகிறார்.

nadhiya

அதன்பின் பிரபுவின் ‘ராஜகுமாரன்’ படத்தில் நடித்தார். தமிழ் சினிமாவில் டாப் ஹீரோக்களில் ஒருவரான நடிகர் ஜெயம் ரவியின் இளமையான அம்மாவாக  எம். குமரன் s/o மஹாலக்ஷ்மி படத்தில் நடித்திருந்தார். அதன்பின் நல்ல கதாபாத்திரங்களை மட்டும் தேர்வு செய்து நடித்து வருகிறார். தமிழ் மட்டுமின்றி தெலுங்கிலும் தொடர்ந்து நடித்து வருகிறார்.

தற்போது 53 வயதாகும் நடிகை நதியா இன்னும் இளமை மாறாமல் அதே அழகில் அப்படியே இருப்பது பலரையும் ஆச்சர்யப்படுத்தி வருகிறது. தினமும் உடற்பயிற்சி, யோகா என உடலையும், மனதையும் அவர் இளமையாக வைத்துள்ளார்.

nadhiya

இந்நிலையில், அவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். இத்தனைக்கும் 2 தடுப்பூசிகளையும் அவர் போட்டுக்கொண்டார். தடுப்பூசி போட்டுக்கொண்ட புகைப்படங்களை கூட தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் பகிர்ந்திருந்தார். எல்லோரும் தடுப்பூசி போட்டுக்கொள்ளுங்கள் என அறிவுரையும் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து விரைவில் அவர் குணமடைய வேண்டும் என ரசிகர்கள் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.

From around the web

Trending Videos

Tamilnadu News