ஜோதிகாவுடன் அக்கா நக்மா!.. பாட்ஷா படத்தில் பார்த்தது போல இன்னமும் அழகா இருக்காரே!..
நடிகை நக்மா படங்களில் நடிப்பதை விட்டு விலகி அரசியலில் ஆக்டிவாக இருந்த நிலையில், தற்போது தனது தங்கை ஜோதிகாவுடன் இருக்கும் புகைப்படம் ஒன்றை சமூக வலைதளத்தில் பகிர்ந்து ரசிகர்களின் கவனம் பெற்றுள்ளார்.
பாகி என்ற இந்தி திரைப்படம் மூலம் திரையுலகில் அறிமுகமான நக்மா, பிரபுதேவாவுடன் இணைந்து நடித்த காதலன் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானார். தொடர்ந்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் பாட்ஷா படத்தில் நடித்ததன் மூலம் அவருக்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் உருவானது. இதனைத் தொடர்ந்து வான்மதி, வில்லாதி வில்லன், சிட்டிசன் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.
தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிகளிலும் தனது நடிப்புத்துள்ளார். அதை தொடர்ந்து காங்கிரஸ் கட்சியில் இணைந்த நக்மா, கட்சியின் பல பொறுப்புகளில் செயல்பட்டு, பெண்கள் தொடர்பான பிரச்னைகள் மற்றும் சமூக நலன் விவகாரங்களிலும் தனது கருத்துகளை வெளிப்படுத்தி வருகிறார்.
இந்நிலையில் தற்போது தங்கை ஜோதிகாவுடன் நக்மா பகிர்ந்துள்ள புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. நடிகை ஜோதிகா தொடர்ந்து மும்பையில் தனது பெற்றோர் மற்றும் சகோதரி என குடும்பத்தார் சூழவே வாழ்ந்து வருகிறார் என்பது கூடுதல் தகவல்.
