Connect with us
rajini

Cinema News

என்னமோ எனக்கு பிடிக்கல!.. ரஜினியுடன் 4 படங்களில் நடித்துவிட்டு பிடிக்காமல் வெளியேறிய நடிகை!..

Rajinikanth: சினிமாவில் வாய்ப்பு என்பது அவ்வளவு சுலபமில்லை. அதுவும் கதாநாயகி வாய்ப்பு என்பது அவ்வளவு சுலபத்தில் கிடைத்துவிடாது. அதற்காக ஏங்கி அலைபவர்கள் பலர். அப்படியே சில படங்களில் நடித்தாலும் விஜய், அஜித், தனுஷ், சிம்பு, சூர்யா, சிவகார்த்திகேயன் போன்ற பெரிய நடிகர்களோடு ஜோடி போட்டும் நடிக்கும் வாய்ப்பு கிடைக்காமல் பல நடிகைகள் இருக்கிறார்கள்.

ஊடகங்களில் பேட்டி கொடுக்கும்போது முன்னணி நடிகர்கள் எனக்கு வாய்ப்பு கொடுப்பதில்லை என ஃபீல் பண்னி பேசும் நடிகைகளும் இருக்கிறார்கள். இப்போதுள்ள பல நடிகைகளுக்கும் விஜய், அஜித் உள்ளிட்ட மற்ற நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்துவிட வேண்டும் என்கிற ஆசை இருக்கிறது.

இதையும் படிங்க: உள்ளூர்ல வேணுனா அம்பானியா இருக்கலாம்! வெளியூர்ல.. ரஜினியை வம்புக்கிழுத்த பார்த்திபன்

ஆனால், எல்லோருக்கும் அந்த வாய்ப்பு கிடைப்பதில்லை. முன்னணி நடிகர்கள் நடிக்கும் படங்களின் அறிவிப்பு வெளியாகும்போது எப்படியாவது அந்த படத்தில் நடிக்கும் வாய்ப்பை பெற பல வகைகளிலும் முயற்சி செய்வார்கள். ஆனால், ஹீரோ டிக் அடிக்கும் நடிகையே அவருக்கு ஜோடியாக நடிக்க முடியும்.

இப்போது விஜய், அஜித் எப்படியே அப்படித்தான் 80களில் ரஜினி, கமல் இருந்தனர். அவர்களுடன் ஜோடி போட்டு நடிக்க பல நடிகைகளும் தவம் கிடந்தார்கள். ஆனால், ரஜினியுடன் சில படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தும் விருப்பமில்லாமல் அப்படத்திலிருந்து வெளியேறிய நடிகை பற்றித்தான் இங்கே பார்க்கபோகிறோம்.

இதையும் படிங்க: தலைப்புக்காகவே ரஜினி நடித்த படம்!.. அதுக்கு பின்னாடி இப்படி ஒரு செண்டிமெண்ட்டா?!..

அவர்தான் நடிகை நளினி. 80களில் பல வெற்றிப்படங்களில் நடித்திருக்கிறார். இவர் ஊடகம் ஒன்றில் அளித்த பேட்டியில் ‘ரஜினியுடன் கை கொடுக்கும் கை படத்தில் அரை நாள் மட்டும் நடித்தேன். அதன்பின் எனக்கு ஏதோ செட் ஆகவில்லை. அதேபோல், தங்க மகன், தம்பிக்கு எந்த ஊரு, மாவீரன் ஆகிய படங்களிலும் அவருடன் சில நாட்கள் மட்டும் நடித்தேன். ஆனால், பிடிக்காமல் வெளியேறிவிட்டேன்’ என சொல்லியிருக்கிறார்.

பின்னாளில் நடிகர் ராமராஜனை திருமணம் செய்து கொண்டார் நளினி. ஒரு மகன், மகள் இருந்த நிலையில் இருவரும் பிரிந்துவிட்டனர். அதன்பின் குணச்சித்திர வேடங்களில் நடிக்க துவங்கினார் நளினி. பெரும்பாலும் காமெடி வேடங்களில் இப்போது கலக்கி வருகிறார்.

இதையும் படிங்க: இதனாலதான் நான் உங்க படத்துல நடிக்கல!. கேள்வி கேட்ட ரஜினியிடம் கேப்டன் சொன்ன நச் பதில்..

Continue Reading

More in Cinema News

To Top