Categories: Cinema News latest news throwback stories

நடிகைகளின் பெயரில் மட்டும் தான் பாடலா? நடிகர்களுக்கு இல்லையா என்று கேட்பவர்களுக்கு….!

நடிகர்களின் பெயரில் பாடல்கள் வந்துள்ளன. குறிப்பாக சொல்ல வேண்டுமானால் ரஜினிகாந்த் பெயரில் தான் பாடல் வந்துள்ளது. கொண்டையில் தாழம்பூ பாடலில் கூட அந்த வரிகள் வரும். வீரத்தில் மன்னன் நீ…வெற்றியில் கண்ணன் நீ…என்றுமே ராஜா நீ ரஜினி…நீ ரஜினி…என்று அந்த வரிகள் வரும்.

அதே போல சூப்பர்ஸ்டாரு யாருன்னு கேட்டா சின்னக் குழந்தையும் சொல்லும். கண்ணு…என்ற பாடல் 1989ல் வெளியான ராஜா சின்ன ரோஜா படத்தில் வந்தது. இந்தப் பாடலை எஸ்.பி.பாலசுப்பிரமணியமும், சைலஜாவும் பாடியிருப்பார்கள். வைரமுத்துவின் வைர வரிகளில் இந்தப் பாடல் உருவானது. இசை அமைத்தவர் சந்திரபோஸ்.

சூப்பர்ஸ்டாரு யாருன்னு கேட்டா சின்னக் குழந்தையும் சொல்லும். கண்ணா ஒங்க பேர ஒரு தரம் சொன்னா நிமிர்ந்து எழுந்திடும் புல்லும்…மேக்கப்ப ஏத்துங்க..கெட்டப்ப மாத்துங்க…செட்டப்ப மாத்தாதீங்க….ன்னு இந்தப் பாடல் விரியும். ஆனால் நாம் கவனிக்க வேண்டிய விஷயம் இதில் என்னவென்றால் நடிகர்களை விட நடிகைகளுக்குத் தான் கவிஞர்கள் முக்கியத்துவம் கொடுத்துள்ளார்கள். இவர்களின் பெயரில் தான் பல பாடல்கள் வந்துள்ளன. அவற்றில் ஒருசிலவற்றைப் பார்க்கலாமா…!

நடிகைகளில் ஒரு சிலர் தமிழ்சினிமாவில் உச்சக்கட்ட மார்க்கெட்டில் இருந்தனர். அப்போது அவர்களுக்கு என்று ரசிகர்கள் வட்டாரம் அமோகமாக இருந்தது. திரைப்படங்களின் பாடல்களில் கூட அவர்களது பெயர் இடம்பெற்றது. அந்த வரிசையில் ஹிட்டான சில படங்களின் பாடல்களைப் பற்றி இங்கு பார்ப்போம்.

தேவி ஸ்ரீ தேவி

devi sridevi song kamal and sridevi

கமல், ஸ்ரீதேவி, ஸ்ரீப்ரியா நடிப்பில் பட்டையைக் கிளப்பிய படம் வாழ்வே மாயம். இந்தப்படத்தில் இடம்பெறும் முதல் பாடல் தேவி ஸ்ரீ தேவி உன் திருவாய் மலர்ந்தொரு வார்த்தை சொல்லிவிடம்மா….பாவி அப்பாவி உன் தரிசனம் தினசரி கிடைத்திட வரம் கொடம்மா….என்ற இந்தப்பாடலில் ஸ்ரீதேவியின் பெயர் இடம்பெற்றிருப்பதைக் காணலாம்.

இந்தப்பாடல் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. கங்கை அமரனின் இன்னிசையில் இந்தப்பாடலை எஸ்.பி.பாலசுப்பிரமணியம் மற்றும் வாணிஜெயராம் பாடியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கொண்டையில் தாழம்பூ

அண்ணாமலை படத்தில் தேவாவின் இன்னிசையில் ரஜினி, குஷ்பு இணைந்து ஆடிப்பாடும் டூயட் பாடல். எஸ்.பி.பாலசுப்பிரமணியம், கே.எஸ்.சித்ரா பாடிய பாடல் இது. படத்தில் விறுவிறுப்பாக இடம்பெற்ற இந்தப்பாடலை ரசிகர்கள் ஆரவாரத்துடன் வரவேற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தப்பாடலில் ரஜினியும், குஷ்புவும் போட்டி போட்டுக் கொண்டு நடனமாடி அசத்தியிருப்பார்கள். கொண்டையில் தாழம்பூ, நெஞ்சிலே வாழைப்பூ, கூடையில் என்ன பூ….குஷ்பூ…என் குஷ்பூ என்று வரும் இந்த வரிகளில் நடிகை குஷ்புவின் பெயர் இடம்பெற்றிருக்கும்.

விண்ணும் மண்ணும் சொல்லும் ரம்பா ரம்பா

1996ல் வெளியான இந்தப்பாடல் இடம்பெற்ற படம் செங்கோட்டை. சி.வி.சசிக்குமார் இயக்கிய இந்தப்படத்தில் அர்ஜூன், ரம்பா இணைந்து நடித்துள்ளனர். வித்யாசாகரின் இன்னிசையில் மனோ, ஸ்வர்ணலதா ஆகியோர் பாடியுள்ளனர்.

விண்ணும் மண்ணும் சொல்லும் ரம்பா ரம்பா கண்கள் என்ன காதல் அம்பா அம்பா என் காதல் மோனலிசா நேரில் வந்தாளே, க்ரீடங்கள் சூடிக் கொண்டாளே…ஏ…முத்தங்களாலே எந்தன் பேரை சொன்னாளே…மின்னல்கள் அள்ளி தந்தாளே என்ற இந்தப்பாடல் ரம்பாவின் புகழை பறைசாற்றின.

ஊர்வசி ஊர்வசி டேக் இட் ஈசி ஊர்வசி

Prabhudeva in oorvasi song

1994ல் வெளியான காதலன் படத்தில் இடம்பெற்ற பாடல் இது. ஏ.ஆர்.ரகுமான் இசையில் ஏ.ஆர்.ரகுமான், சுரேஷ் பீட்டர்ஸ், சாகுல் ஹமீது ஆகியோர் பாடியுள்ளனர். வைரமுத்து வரிகளில் உருவான இந்தப்பாடலுக்கு ரசிகர்கள் பெரிதும் வரவேற்பு கொடுத்தனர்.

ஊர்வசி ஊர்வசி டேக் இட் ஈசி ஊர்வசி…ஊசி போல உடம்பிருந்தா தேவையில்ல பார்மசி…வாழ்க்கையில் வெல்லவே டேக் இட் ஈசி பாலிசி..வானவில் வாழ்க்கையில் வாலிபம் ஒரு பேன்டசி…..என்று வைரமுத்துவின் இந்த வரிகள் விரியும். ஆனால் இந்தப்பாடலில் ஊர்வசி நடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

லைலா லைலா லைட்டாத்தான் அடிப்பா சைட்டு

கார்த்திக் ராஜாவின் இன்னிசையில் காதலா காதலா படத்தில் இந்தப்பாடல் இடம்பெற்றுள்ளது. கமலுடன் பிரபுதேவாவும் இணைந்து நடித்துள்ளனர். ஹரிஹரன் உடன் பவதாரிணி இணைந்து பாடியுள்ளார். பிரபுதேவாவுடன் ரம்பா இணைந்து நடித்துள்ளார். இந்தப்பாடலோ லைலா என்ற நடிகையின் பெயரில் உருவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

லைலா லைலா லைட்டாத் தான் அடிப்பா சைட்டு, லப்பு டப்பு ஹை ஸ்பீடில் அலறும் என் ஹார்ட்டு…லெப்ட்டு ரைட்டு கண்ணாலே கொடுப்பா ஹீட்டு…லவ்வு லவ்வு என்றே தான் அலறும் என் பாட்டு…என்று இந்தப்பாடல் வரும். இந்தப்பாடலிலும் லைலா நடித்திருக்க மாட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. இது ஒரு முழுநீள நகைச்சுவைப்படம்.

sankaran v
பி.ஏ பட்டதாரியான இவர் ஊடகத் துறையில் 13 ஆண்டுகளாக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, ஆன்மிகம்,லைப் ஸ்டைல் கட்டுரைகளை வழங்கி வந்தார். கடந்த 4 ஆண்டுகளாக சினி ரிப்போர்டஸ் தளத்தில் உதவி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
Published by
sankaran v