×

கிணற்றுக்குள் தவறி விழுந்த நமீதா... பதறிப்போன ஊர் மக்கள் - வீடியோ!

திடீரென கிணற்றுக்குள் தவறி விழுந்த நடிகை நமீதா

 
2000ம்  காலகட்டத்தில் தமிழ் சினிமாவில் அறிமுகமான நமீதா கொஞ்ச நாட்களிலேயே ஒட்டுமொத்த இளசுகளையும் மச்சான்ஸ் என்று அழைத்து கவர்ந்தார். தமிழில் கடந்த 2004-ம் ஆண்டு வெளியான விஜயகாந்தின் எங்கள் அண்ணா படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானார்.

அதையடுத்து அழகிய தமிழ் மகன், பில்லா  உள்ளிட்ட சூப்பர் ஹிட் படங்களில் நடித்து வெற்றி பெற்றார். கொஞ்சும் தமிழ், அளவற்ற கவர்ச்சி என அத்தனை பேருக்கும் பரீட்சியமான நடிகையான நமீதாவுக்கு நாட்கள் செல்ல செல்ல புது நடிகைகளின் வருகையால் மார்க்கெட் சரிந்தது.  

பின்னர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் நுழைந்து ரசிகர்களிடையே பேமஸ் ஆனார். அதன்பின் தனது நீண்டநாள் நண்பரும் காதலருமான வீரேந்திர சௌத்ரியை 2017-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டு வாழ்வில் செட்டில் ஆனார். இந்நிலையில் தற்ப்போது "BOW VOW" என்ற படத்தில் நடித்து வருகிறார். தமிழ், மலையாளம் என இரு மொழிகளில் உருவாகும் இப்படத்தின் ஷூட்டிங்கில் நமீதா காட்சி ஒன்று கிணற்றுக்குள் தவறி விழுவது போன்றும் பின்னர் அவரை நாய் ஒன்று காப்பாற்றுவது போன்று காட்சி அமைக்கப்பட்டுள்ளது.

அடர்ந்த காட்டில் எடுக்கப்பட்ட இந்த காட்சியில் நமீதா கிணற்றில் விழுந்தவுடன் அங்கிருந்த மக்கள் அவரை கண்டு பதறியடித்து காப்பாற்ற முயற்சித்துள்ளனர். பின்னர் படத்தின் படப்பிடிப்பு என்றதும் அவர்கள் அமைதி ஆகினர். இதோ அந்த ஷூட்டிங் வீடியோ.

From around the web

Trending Videos

Tamilnadu News