×

ஜெயலலிதாவால் பல கோடிகளை இழந்த நடிகை நமீதா..!

2000ம்  காலகட்டத்தில் தமிழ் சினிமாவில் அறிமுகமான நமீதா கொஞ்ச நாட்களிலேயே ஒட்டுமொத்த இளசுகளையும் மச்சான்ஸ் என்று அழைத்து கவர்ந்தார். தமிழில் கடந்த 2004-ம் ஆண்டு வெளியான விஜயகாந்தின் எங்கள் அண்ணா படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானார்.

 

அதையடுத்து அழகிய தமிழ் மகன், பில்லா  உள்ளிட்ட சூப்பர் ஹிட் படங்களில் நடித்து வெற்றி பெற்றார். கொஞ்சும் தமிழ், அளவற்ற கவர்ச்சி என அத்தனை பேருக்கும் பரீட்சியமான நடிகையான நமீதா பீக்கில் இருக்கும் போதே அதிமுக-வில் உறுப்பினராக சேர்ந்தார்.

அப்போது அனைத்து மாவட்டத்திலும் கட்சி கூட்டத்தில் பங்கேற்று பேச ஜெயலலிதாவிடம் இருந்து நமீதாவிற்கு வாய்ப்பு கிடைத்தது. அப்படி நமீதா ஒரு மேடையில் பேச சென்றபோது ஜெயலலிதா இருக்கும் போதே மேடையில் எல்லோருக்கும் கை அசைத்துள்ளார்.

அவ்ளோவ் தான் அன்றிலிருந்து அவரை எந்த கூட்டத்திற்கும் அழைத்து வரவேண்டாம் என ஜெயலலிதா கூறி விட்டாராம். நமீதாவிற்கு ஒரு கூட்டத்தில் பேச  ரூ 5 லட்சம் சம்பளம் பேசப்பட்டதாம் அது அத்தனையும் கையசைத்து இழந்துவிட்டதாக வருத்தத்துடன் கூறியுள்ளார் நமீதா.  

From around the web

Trending Videos

Tamilnadu News